தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1067

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அடிமை, பெண், சிறுவன், நோயாளி ஆகிய நான்கு பேரைத் தவிர ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஜமாஅத்துடன் ஜும்ஆ தொழுவது கட்டாய கடமையாகும்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

(அபூதாவூத்: 1067)

حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا هُرَيْمٌ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلَّا أَرْبَعَةً: عَبْدٌ مَمْلُوكٌ، أَوِ امْرَأَةٌ، أَوْ صَبِيٌّ، أَوْ مَرِيضٌ

قَالَ أَبُو دَاوُدَ: «طَارِقُ بْنُ شِهَابٍ، قَدْ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَسْمَعْ مِنْهُ شَيْئًا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-901.
Abu-Dawood-Shamila-1067.
Abu-Dawood-Alamiah-901.
Abu-Dawood-JawamiulKalim-903.




  •  இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20020-தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள், சிறிய வயது நபித்தோழர் ஆவார். இவர் நபி (ஸல்) அவர்களை பார்த்துள்ளார். ஆனால் ஹதீஸ்களை கேட்கவில்லை என அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    போன்றோர் கூறியுள்ளனர்.
  • தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள், மற்ற நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இந்த செய்தியில் விடுபட்டவர் நபித்தோழராக இருக்கலாம் என்ற அடிப்படையில் பெரும்பாலான அறிஞர்கள் இந்த செய்தியை சரியானது எனக் கூறியுள்ளனர்…..
  • ஹாகிம்-1062  எண்ணில் தாரிக் பின் ஷிஹாப் (ரலி), அபூமூஸா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்ததாக இடம்பெற்றுள்ளது. என்றாலும் இது ஷாத் அல்லது முன்கர் என அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் கூறியுள்ளார்.

1 . இந்தக் கருத்தில் தாரிக் பின் ஷிஹாப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1067 , அல்முஃஜமுல் கபீர்-8206 , அல்முஃஜமுல் அவ்ஸத்-5679 , தாரகுத்னீ-1577 , ஹாகிம்-1062 , …

2 . தமீமுத் தாரீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-1257 ,

3 . ஸுபைர் குடும்பத்தாரின் அடிமை வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5148 ,

4 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரகுத்னீ-1576 ,

5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-202 .

6 . அபூமூஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-1062 , …

  • பெண்கள் ஜும்ஆ தொழுகைக்குப் பள்ளிக்கு செல்லக் கூடாது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸை சிலர் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் இந்த நபிமொழியில் பெண்கள் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்று சொல்லப்படவில்லை. அவர்களுக்கு ஜும்ஆ கடமையில்லை என்றே கூறப்பட்டுள்ளது.
  • ளுஹாத் தொழுகை, இரவுத் தொழுகை, சுன்னத்தான தொழுகைகள், நஃபிலான தொழுகைகள், சுன்னத்தான நோன்புகள், உபரியான தான தர்மங்கள் ஆகியவை கடமை இல்லை என மார்க்கம் கூறுகிறது. இதனால் இவை அனைத்தும் ஹராமான செயல்கள் என்று இவர்கள் கூறுவார்களா?
  • இதே செய்தியில் பெண்களுடன் சிறுவர்கள், அடிமைகள், நோயாளிகள் ஆகியோருக்கும் ஜும்ஆ கடமையில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே சிறுவர்கள், அடிமைகள், நோயாளிகள் ஆகியோர் ஜும்ஆவை நிறைவேற்ற பள்ளிவாசலுக்குச் செல்வது ஹராம் என்று இவர்கள் கூறுவார்களா?

மாறாக இது சலுகை என்றும், விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். (மேலும் பார்க்க: முஸ்லிம்-1580 )

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.