தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1071

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று பெருநாள் தொழுகையைப் பகலின் ஆரம்ப நேரத்தில் தொழுவித்தார்கள். பின்னர் நாங்கள் ஜுமுஆ தொழுவதற்குச் சென்றோம். ஆனால் அவர் ஜுமுஆ தொழுகைக்கு வரவில்லை. நாங்கள் தனியாகவே தொழுதோம். இந்நிகழ்ச்சி நடக்கும் போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தாயிஃப் நகரத்தில் இருந்தார்கள். அவர் மதீனா வந்ததும் அவரிடம் இதைப் பற்றி நாங்கள் கூறினோம். அதற்கு அவர், ‘இப்னு ஸுபைர் (ரலி) நபிவழிப்படியே நடந்துள்ளார்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)

(அபூதாவூத்: 1071)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ الْبَجَلِيُّ، حَدَّثَنَا أَسْبَاطٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، قَالَ:

صَلَّى بِنَا ابْنُ الزُّبَيْرِ فِي يَوْمِ عِيدٍ، فِي يَوْمِ جُمُعَةٍ أَوَّلَ النَّهَارِ، ثُمَّ رُحْنَا إِلَى الْجُمُعَةِ، فَلَمْ يَخْرُجْ إِلَيْنَا فَصَلَّيْنَا وُحْدَانًا، وَكَانَ ابْنُ عَبَّاسٍ بِالطَّائِفِ، فَلَمَّا قَدِمَ ذَكَرْنَا ذَلِكَ لَهُ، فَقَالَ: «أَصَابَ السُّنَّةَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-905.
Abu-Dawood-Shamila-1071.
Abu-Dawood-Alamiah-905.
Abu-Dawood-JawamiulKalim-907.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.