தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1536

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேரின் பிரார்த்தனை (துஆ) எவ்விதச் சந்தேகமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். 

1 . ஒரு தந்தை தன் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை.

2 . பயணியின் பிரார்த்தனை.

3 . அநியாயம் செய்யப்பட்டவனின்  பிரார்த்தனை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 1536)

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

ثَلَاثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٌ لَا شَكَّ فِيهِنَّ: دَعْوَةُ الْوَالِدِ، وَدَعْوَةُ الْمُسَافِرِ، وَدَعْوَةُ الْمَظْلُومِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1313.
Abu-Dawood-Shamila-1536.
Abu-Dawood-Alamiah-1313.
Abu-Dawood-JawamiulKalim-1316.




شعَيب الأرنؤوط

حسن لغيره، وهذا إسناد ضعيف لجهالة أبي جعفر، وهو الأنصاري المؤذن.

  • இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் அபூ ஜஃபர் அறியப்படாதவர் ஆவார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் இவர் முஹம்மது பின் அலி பின் ஹுஸைன் என்று கூறுகின்றார். ஆனால் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இதை மறுத்து முஹம்மது பின் அலி பின் ஹுஸைன் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. எனவே இவர் வேறு நபர் என்று கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.4/502 )
  • இந்த செய்தியை ஷுஐப் அவர்கள், ஹஸனுன் லிகைரிஹீ என்று குறிப்பிட்டுள்ளார்.
  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், இந்தக் கருத்தில் உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்தியின் மூலம் (ஷாஹித் என்ற அடிப்படையில்) மேற்கண்ட செய்தியை ஹஸனுன் லிகைரிஹீ என்று குறிப்பிட்டுள்ளார். (நூல்: அஸ்ஸஹீஹா-‌‌596)
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், மேற்கண்ட அபூஜஃபர் என்பவரையும், உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் ஸைத் என்பரையும் மக்பூல் தரத்தில் கூறியுள்ளார்.

1 . இந்தக் கருத்தில் அபூ ஹுரைரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • யஹ்யா பின் அபூகஸீர் —> அபூ ஜஃபர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க : முஸ்னத் தயாலிஸீ-2639 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29830 , அஹ்மத்-7510 , 80438044 , 8581 , 9606 , 10196 , 10708 , 10771 , அல்அதபுல் முஃப்ரத்-32 , 481 , இப்னு மாஜா-3862 , அபூதாவூத்-1536 , திர்மிதீ-1905 , 3448 , இப்னு ஹிப்பான்-2699 ,

  • யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-24 ,

2 . உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு குஸைமா-2478 .

இதனுடன் தொடர்புள்ள செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3598 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.