தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2140

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். ‘இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்’ என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்’ என்று கூறினேன்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?’ எனக் கேட்டார்கள். ‘மாட்டேன்’ என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்’ ஏனெனில் (அந்தளவிற்கு) அல்லாஹ் கணவனுக்கு செய்யவேண்டிய கடமையை அவள் மீது விதித்துள்ளான் என்று கூறினார்கள்…

அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)

(அபூதாவூத்: 2140)

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، عَنْ شَرِيكٍ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ، قَالَ

أَتَيْتُ الْحِيرَةَ فَرَأَيْتُهُمْ يَسْجُدُونَ لِمَرْزُبَانٍ لَهُمْ فَقُلْتُ: رَسُولُ اللَّهِ أَحَقُّ أَنْ يُسْجَدَ لَهُ، قَالَ: فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: إِنِّي أَتَيْتُ الْحِيرَةَ فَرَأَيْتُهُمْ يَسْجُدُونَ لِمَرْزُبَانٍ لَهُمْ فَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ أَحَقُّ أَنْ نَسْجُدَ لَكَ، قَالَ: «أَرَأَيْتَ لَوْ مَرَرْتَ بِقَبْرِي أَكُنْتَ تَسْجُدُ لَهُ؟» قَالَ: قُلْتُ: لَا، قَالَ: «فَلَا تَفْعَلُوا، لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ النِّسَاءَ أَنْ يَسْجُدْنَ لِأَزْوَاجِهِنَّ لِمَا جَعَلَ اللَّهُ لَهُمْ عَلَيْهِنَّ مِنَ الْحَقِّ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1828.
Abu-Dawood-Shamila-2140.
Abu-Dawood-Alamiah-1828.
Abu-Dawood-JawamiulKalim-1831.




[حكم الألباني] : صحيح دون جملة القبر

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் شريك بن عبد الله بن الحارث ஷரீக் பின் அப்துல்லாஹ் நினைவாற்றல் குறையுள்ளவர்.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    , நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவர் தனித்து அறிவித்தால் அது பலமானது அல்ல என்று கூறியுள்ளனர்.

صدوق يخطئ كثيرا , تغير حفظه منذ ولي القضاء بالكوفة ، وكان عادلا فاضلا عابدا شديدا على أهل البدع

تقريب التهذيب: (1 / 436)

சிலர் ஷரீக் , ஹுஸைனிடம் செவியேற்றது மூளை குழம்புவதற்கு முன் என்பதால் இந்த செய்தியை ஹஸன் என்று கூறுகிறார்கள்…

5 . இந்தக் கருத்தில் கைஸ் பின் ஸஅத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : தாரிமீ-1504 , அபூதாவூத்-2140 , முஸ்னத் பஸ்ஸார்-3747 , அல்முஃஜமுல் கபீர்-895 , ஹாகிம்-2763 , குப்ரா பைஹகீ-14705 ,

மேலும் பார்க்க : திர்மிதீ-1159 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.