தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2440

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அரஃபாவில் உள்ளவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை விட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்…

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 2440)

بَابٌ فِي صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَوْشَبُ بْنُ عُقَيْلٍ، عَنْ مَهْدِيٍّ الْهَجَرِيِّ، حَدَّثَنَا عِكْرِمَةُ، قَالَ:

كُنَّا عِنْدَ أَبِي هُرَيْرَةَ، فِي بَيْتِهِ فَحَدَّثَنَا، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2084.
Abu-Dawood-Shamila-2440.
Abu-Dawood-Alamiah-2084.
Abu-Dawood-JawamiulKalim-2087.




  • இதில் இடம்பெறும் மஹ்தீ பின் ஹரிப் என்ற அறிவிப்பாளரின் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படவில்லை. எனவே இது பலவீனமான செய்தி.
  • ஆனால் நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது அரஃபா நாளில் நோன்பு நோற்கவில்லை. பார்க்க: புகாரி-1989 .
  • நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து இந்த ஆண்டிலேயே) கற்றுக்கொள்ளுங்கள். முஸ்லிம்-2497 .
  • எனவே அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்பது நபிவழி அல்ல.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-8031 , 9760 , இப்னு மாஜா-1732 , அபூதாவூத்-2440 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.