தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4163

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

முடியை ஒழுங்காக பராமரித்தல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)

(அபூதாவூத்: 4163)

بَابٌ فِي إِصْلَاحِ الشَّعَرِ

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4163.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3634.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21935-அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாத் என்பவர் பற்றி, சிலர் பலமானவர் என்றும்; சிலர் பலவீனமானவர் என்றும்; சிலர் இவர் ஆதாரத்திற்கேற்றவர் அல்ல என்றும் கூறியுள்ளனர்.
  • இதன் காரணம் இவர் மதீனாவில் இருந்து பக்தாதுக்கு சென்ற பின்னர் இவரின் நினைவாற்றலில் கோளாறு ஏற்பட்டுவிட்டது என்பதால் ஆகும். எனவே தான் இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    ஸாஜீ ஆகியோர் இவர் மதீனாவில் அறிவித்த செய்திகள் சரியானவை என்றும், பக்தாதில் அறிவித்த செய்திகள் பலவீனமானவை என்றும் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், முன்சென்ற அறிஞர்களின் விமர்சனத்தின் படி இவரை நம்பகமானவர் என்றும், பக்தாதுக்கு சென்ற பின் இவரின் நினைவாற்றலில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்றும் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/504, தக்ரீபுத் தஹ்தீப்-1/578)

இவரிடமிருந்து அறிவிக்கும் இப்னு வஹ்ப் அவர்கள், மதீனாவாசி என்பதால் இதில் விமர்சனம் இல்லை. இந்த அறிவிப்பாளர்தொடரை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-10/368)

ومن مناكيره: ‌من ‌كان ‌له ‌شعر ‌فليكرمه

  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், (இவரைப் பற்றிய விமர்சனத்தின் படி) இந்த செய்தியை முன்கர்-நிராகரிக்கப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார்.

(நூல்: மீஸானுல் இஃதிதால்-2/576)

இந்த செய்தியை ஸுஹைல் அவர்களிடமிருந்து முஹம்மது பின் அபூதிஃப் என்பவரும் அறிவித்துள்ளார்.

(பார்க்க: தஸ்மியது மா இன்தஹா இலைனா-17

இது சரியான அறிவிப்பாளர்தொடர் என்பதாலும், இந்த செய்தி வேறு சில நபித்தோழர்கள் வழியாகவும் வந்திருப்பதாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இதை சரியான செய்தி என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-500)

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4163 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8485 , தஸ்மியது மா இன்தஹா இலைனா-17 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-3365 , ஷுஅபுல் ஈமான்-6036 , அல்ஆதாப் லில்பைஹகீ-560 ,

2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-3360 .

3 . அபூகதாதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: நஸாயீ-5237 .

4 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-671 .

5 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அக்பாரு அஸ்பஹான்-700 .

6 . ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் அவர்களின் சில ஆசிரியர்கள் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-6038 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4159 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.