தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-676

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகை) வரிசைகளில் வலதுபுறத்தில் இருப்போர்களுக்கு அல்லாஹ் அருள்புரிகிறான். வானவர்கள், அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளைக் கேட்கின்றனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(அபூதாவூத்: 676)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ عُثْمَانَ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى مَيَامِنِ الصُّفُوفِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-578.
Abu-Dawood-Shamila-676.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-577.




  • இந்த செய்தியில் வலதுபுற வரிசையில் இருப்பவர்கள் மீது அல்லாஹ்வும், மலக்குமார்களும் ஸலவாத்துக் கூறுகின்றனர் என்று வந்துள்ளது.
  • இதில் “வலதுபுற வரிசை” என்ற வார்த்தை ஷாத் அல்லது முன்கர் என்ற வகையில் பலவீனமானதாகும்.

இதைப் பற்றிய விவரம் (சுருக்கம்)

  • இந்த செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்ற ஏழு அறிவிப்பாளர்கள் “வலதுபுற வரிசை” என்ற வார்த்தையை அறிவிக்கவில்லை. இவர்களில் அதிகமானோர் மிகப் பலமானவர்கள்.
  • ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராவீ-44870-முஆவியா பின் ஹிஷாம் அவர்கள் பற்றி சிலர் பாராட்டியும் உள்ளனர். சிலர் தவறிழைப்பவர் என்று விமர்சித்தும் உள்ளனர். இவர் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    அவர்களிடமிருந்து அறிவிக்கும் சில ஹதீஸ்களில் தவறாக அறிவித்துள்ளார் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-8/149)

எனவே மேற்கண்ட அறிவிப்பாளர்தொடர் பலவீனமானதாகும். மற்றவர்கள் அறிவிக்கும் செய்தியே மஹ்ஃபூல் ஆகும்.

  • மேலும், இதில் வரும் ராவீ-6786-உஸாமா பின் ஸைத் அல்லைஸீ அவர்கள் இடம்பெறும் செய்திகளை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    போன்றோர் துணை சான்றாக கூறியுள்ளனர்.
  • யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள் ஆரம்பத்தில் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்தாலும் பின்னால் அவரின் செய்திகளை நான் இனி அறிவிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். இவரின் கருத்தையே இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் போன்றோர் ஏற்றுள்ளனர்.
  • இமாம் இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    தஹாவீ பிறப்பு ஹிஜ்ரி 238
    இறப்பு ஹிஜ்ரி 321
    வயது: 83
    போன்றோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர். யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அவர்கள், இவர் மதீனாவாசிகளிடம் நம்பிக்கைக்குரிய, பலமானவர் என்று கூறியதாக பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் சில இடங்களில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவரின் செய்திகளை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    போன்றோர் துணை ஆதாரமாகக் கூறியுள்ளனர். எனவே இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் எனக் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.1/108, தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/124, ஸியரு அஃலாமின் நுபலா-145)

…உஸாமா பின் ஸைத் அல்லைஸீ மனனத்திலிருந்து அறிவித்தால் தவறிழைப்பார் என்பதாலே அவரை சிலர் விமர்சித்துள்ளனர். அவர் நூலிலிருந்து அறிவித்தால் தவறு செய்யமாட்டார். அவர் தன் நூலிலிருந்து அறிவிக்கும் செய்தியையே இப்னு வஹ்ப் அறிவிப்பார் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
போன்ற சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இந்த செய்தியை இப்னு வஹ்ப் அவர்களும் இவரிடமிருந்து அறிவித்துள்ளார்.

(பார்க்க: இப்னு குஸைமா-1550)

எனவே வலதுபுறம் என்ற வார்த்தை இடம்பெறாத செய்தியை சில அறிஞர்கள் ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.

(பார்க்க: அஹ்மத்-25270)

….

…(நூல்: அல்இலலுல் வாரிதா-3564, 14/209)

1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1005 , அபூதாவூத்-676 , இப்னு ஹிப்பான்-2160 , குப்ரா பைஹகீ-5199 ,

இன்ஷா அல்லாஹ் மற்ற கூடுதல் தகவல்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-25270 ,

4 comments on Abu-Dawood-676

  1. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் “உஸாமா பின் ஸைத்’ என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் ஆவார்.

    ”இவர் ஒரு பொருட்டாக மதிக்கத் தக்கவர் அல்ல” என இமாம் அஹ்மத் விமர்சித்துள்ளார்கள்.

    யஹ்யா பின் ஸயீத் அவர்கள் இவரைப் பலவீனமாக்கியுள்ளார்கள்.

    ”இவருடைய ஹதீஸ்கள் எழுதிக் கொள்ளப்படும். இவரை ஆதாரமாகக் கொள்ளப்படாது” என இமாம் அபூ ஹாதிம் விமர்சித்துள்ளார்கள்.

    ”இவர் உறுதியானவராக இல்லை” என இமாம் நஸாயீ கூறுகிறார்.

    ”இமாம் முஸ்லிம் இவரை ஆதாரமாகக் கொள்ளவில்லை. இவருடைய ஹதீஸ்களை துணைச் சான்றாகவே பதிவு செய்துள்ளார்கள்” என இப்துல் கத்தான் அல்ஃபாஸி கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 1 பக்கம் 183)

    மேலும் மேற்கண்ட அறிவிப்பாளர் தொடரில் ”முஆவியா இப்னு ஹிஸாம்” என்றொரு அறிவிப்பாளரும் இடம்பெறுகிறார். இவரையும் இமாம்கள் குறைகூறியுள்ளனர். எனவே இவரும் பலவீனமானவர் ஆவார்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம். இந்த அறிவிப்பாளர்தொடருடன் தொடர்புடைய பல செய்திகள் உள்ளன. அனைத்தையும் பதிவு செய்யும் போதே இதைப்பற்றிய விளக்கம் பதிவு செய்யப்படும்.

  2. இந்த ஹதீஸ் ஹசன் தரத்தில் இருக்கிறது… ஆனால் நீங்கள் எப்படி பலவீனமான ஹதீஸ்கள் என்று கூறுகிறீர்கள்??

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இன்ஷா அல்லாஹ் இந்த செய்தி பற்றி பிறகு பதிவு செய்யப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.