தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Akhbar-Asbahan-240

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

திருமணம் செய்யுங்கள். ஆனால் விவாகரத்து செய்யாதீர்கள். விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

(akhbar-asbahan-240: 240)

أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنُ يَحْيَى أَبُو بَكْرٍ الضَّرِيرُ الْخَبَّازُ جَلِيسُ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الْوَهَّابِ تُوُفِّيَ بَعْدَ الْخَمْسِينَ، كَتَبَ بِالْعِرَاقِ، وَبِأَصْبَهَانَ، مِنْ أَهْلِ الْقُرْآنِ وَالْفَضْلِ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى الضَّرِيرُ الْخَبَّازُ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ، ثنا أَبُو إِبْرَاهِيمَ التَّرْجُمَانِيُّ، ثنا عَمْرُو بْنُ جُمَيْعٍ، عَنْ جُوَيْبِرٍ، عَنِ الضَّحَّاكِ، عَنِ النَّزَّالِ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«تَزَوَّجُوا وَلَا تُطَلِّقُوا، فَإِنَّ الطَّلَاقَ يَهْتَزُّ لَهُ الْعَرْشُ»


Akhbar-Asbahan-Tamil-.
Akhbar-Asbahan-TamilMisc-.
Akhbar-Asbahan-Shamila-240.
Akhbar-Asbahan-Alamiah-.
Akhbar-Asbahan-JawamiulKalim-474.




  • இந்தச் செய்தி (அபூஇப்ராஹீம் அத்தர்ஜுமானீ என்பவர் வழியாகவே) அபூஇப்ராஹீம் —> அம்ர் பின் ஜுமைஃ —> ஜுவைபிர் பின் ஸயீத் —> ளஹ்ஹாக்… என்ற மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது.

அபூஇப்ராஹீம் அத்தர்ஜுமானீ என்பவரிடமிருந்து மூவர் அறிவித்துள்ளனர்.

1 . அலீ பின் அப்துல் ஹமீத்.

பார்க்க: தஃப்ஸீருஸ் ஸஃலபீ-3163 , இப்னு அதீ-1279 ,

2 . அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அப்துல்அஸீஸ்.

பார்க்க: அக்பாரு அஸ்பஹான்-240 ,

3 . முஹம்மது பின் மஹ்மூத்.

பார்க்க: தாரீகு பக்தாத்-4103 , அல்மவ்ளூஆத்-இப்னுல் ஜவ்ஸீ-1290 ,

1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32213-அம்ர் பின் ஜுமைஃ என்பவர் பற்றி,

  • இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களும்,
  • நிராகரிக்கப்பட்டவர் என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்களும்,
  • கைவிடப்பட்டவர் என நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்றோரும் விமர்சித்துள்ளனர்.

(நூல்: லிஸானுல் மீஸான்-5788)

2 . மேலும் ராவீ-9949-ஜாபிர் பின் ஸயீத் என்ற ஜுவைபிர் பின் ஸயீத் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் ஆவார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/205).

  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும் இந்த செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என்று கூறியுள்ளார். (நூல்: அள்ளயீஃபா-147, 731)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அக்பாரு அஸ்பஹான்-240 , தாரீகு பக்தாத்-4103 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-7848 , இப்னு மாஜா-2018 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.