தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-11452

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையில் ஒருவருக்கொருவர்) இடைவெளி விட்டு நிற்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(குறிப்பு: இந்த செய்தியில் அரபி வாசகம் “இய்யாய, வல்ஃபுரஜ்” என்று இடம்பெற்றுள்ளது. இதன் நேரடியான பொருள் “இடைவெளியை விட்டு என்னை எச்சரிக்கை செய்கிறேன்” என்பதாகும். என்றாலும் முன்னிலையில் இருப்பவரை-மற்றவரை எச்சரிக்கை செய்வதற்கும் இவ்வாறு அரபு வழக்கில் கூறுவதுண்டு)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11452)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ الْمُؤَدِّبُ، ثنا مُحَمَّدُ بْنُ بُكَيْرٍ الْحَضْرَمِيُّ، ثنا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِيَّايَ وَالْفُرَجَ» يَعْنِي: فِي الصَّلَاةِ


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11452.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11296.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26543-இப்னு ஜுரைஜ் அவர்கள், நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் என்று விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.

என்றாலும் இவர் அதாஉ பின் அபூரபாஹ்விடமிருந்து அறிவிக்கும் செய்தியில் தத்லீஸ் செய்யமாட்டார். காரணம்:

1 . இவர் அதாவிடம் 18 அல்லது 19 வருடங்களாக ஹதீஸைக் கேட்கும் தொடர்பில் இருந்துள்ளார்.

2 . அதாவின் மாணவர்களில் இவரே மிகவும் ஏற்கத்தக்கவர் என இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
போன்றோர் கூறியுள்ளனர்.

3 . உங்களுக்கு பின் உங்கள் சபையில் ஹதீஸை அறிவிக்க யாரை விட்டுச் செல்வீர்கள்? என்று அதா அவர்களிடம் கேட்கப்பட்டபோது அவர் இப்னு ஜுரைஜை சுட்டிக்காட்டினார்.

4 . இப்னு ஜுரைஜ் அவர்களே, நான் ஸமிஃது அதாஃ-அதாவிடம் செவியேற்றேன் என்று கூறாமல் கால அதாஃ-அதாஃ கூறினார் என்று கூறினாலும் அது நான் அதாவிடம் நேரடியாக கேட்டவை தான் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/356, 357, தாரீகு பக்தாத்-10/402, ஸியரு அஃலாமின் நுபலாஃ-6/328, தஹ்தீபுத் தஹ்தீப்-3/503)

எனவே மேற்கண்ட செய்தி (இப்னு ஜுரைஜ் தத்லீஸ் செய்துள்ளார் என்ற காரணத்தால்) பலவீனமானது என்று முடிவு செய்யக்கூடாது.

  • இந்தச் செய்தியை (அல்முஃஜமுல் கபீர்-11452 எண்ணில்) இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும், ஹஃப்ஸ் பின் கியாஸ் என்பவரும், (அல்இலல்-2/313) இல் இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும், முஹம்மது பின் காலித் அல்வஹ்பீ என்பவரும் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளனர். (அல்முஃஜமுல் கபீர்-11453 எண்ணில்) இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும், அப்துர்ரஸ்ஸாக் அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். மூன்று அறிவிப்பாளர்தொடர்களும் (ஓரளவு) சரியானவை என்பதாலும், இருவர் நபியின் கூற்றாக அறிவித்துள்ளனர் என்பதாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த செய்தி நபியின் கூற்றாக வந்திருப்பதும், நபித்தோழரின் கூற்றாக வந்திருப்பதும் சரியானதே. குறிப்பாக நபியின் கூற்றாக வந்திருப்பது மிகச் சரியானது என்று கூறியுள்ளார்.
  • மேலும் இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    அவர்கள், இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து முஹம்மது பின் காலித் என்பவர் அறிவிக்கும் செய்தி பற்றி, தனது தந்தை அபூஹாதிமிடம் கேட்கும் போது அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இந்த செய்தி முன்கர் ஆகும். இப்னு ஜுரைஜ் இந்த செய்தியை இந்த அறிவிப்பாளர்தொடரில் அறிவித்திருக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-394 (2/313)

  • இந்தத் தகவலை கூறிய அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், இப்னு ஜுரைஜ் தத்லீஸ் செய்பவர் என்றாலும் அதாஉ அவர்களிடமிருந்து அறிவிப்பதில் தத்லீஸ் இல்லை என்று இப்னு ஜுரைஜும், (மற்ற அறிஞர்களும்) கூறியிருப்பதால் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் முன்கர் என்று கூறியதற்கு காரணம் இப்னு ஜுரைஜின் தத்லீஸ் அல்ல. முஹம்மது பின் காலிதாக இருக்கலாம். ஆனாலும் தெளிவாக சரியான காரணத்தை அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறவில்லை என்பதால் அவர் முன்கர் என்று கூறியதை உள்ளம் ஏற்க மறுக்கிறது. பலமான இருவர் நபியின் கூற்றாக அறிவித்திருக்காவிட்டால் அப்துர்ரஸ்ஸாக் அவர்களின் அறிவிப்பையே நாம் ஏற்றிருப்போம் என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-1757)

எனவே அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளார்.

ஹைஸமீ அவர்களும் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளார். (நூல்: மஜ்மஉஸ் ஸவாஇத்-2/91)

  • என்றாலும், இப்னு ஜுரைஜிடமிருந்து அப்துர்ரஸ்ஸாகும் (முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-2474), வகீஉ அவர்களும் (முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-3843) அதாஃ அவர்கள், நபித்தோழரை விட்டுவிட்டு முர்ஸலாக அறிவித்துள்ளதாக கூறியுள்ளனர். இருவரும் பலமானவர்கள் என்பதால் இந்த செய்தி முர்ஸல் என்று கூறுவதே பொருத்தமானது.
  • (தப்ரானீ கபீர்-11453 இல்) அப்துர்ரஸ்ஸாகிடமிருந்து அறிவிக்கும் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் தவறாக அறிவித்திருக்கலாம் என அபூஅம்ர்-யாஸிர் பின் முஹம்மத் என்ற அறிஞர் கூறியுள்ளார்.

(நூல்: ஃபள்லுர்ரஹீமில் வதூத்-7/394)

மேலும் இந்த செய்தியின் இடைமுறிவு ஏற்படாத (முத்தஸிலான) அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் அறிவிப்பாளர்களை விட முர்ஸலான அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் அறிவிப்பாளர்களே மிகப்பலமானவர்கள் என்பதால் இது முர்ஸலான செய்தி என்றே முடிவு செய்யவேண்டும்.

1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11452 , 11453 ,

2 . அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-2474 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-3843 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-717அபூதாவூத்-666 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.