தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-2966

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)

(bazzar-2966: 2966)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْخَطَّابِ، قَالَ: أَخْبَرَنَا عَلِيُّ بْنُ غُرَابٍ، قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ حُذَيْفَةَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»

وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُهُ يُرْوَى عَنْ حُذَيْفَةَ مُسْنَدًا إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ، وَقَدْ رَوَاهُ غَيْرُ عَلِيِّ بْنِ غُرَابٍ عَنْ هِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِيهِ مَوْقُوفًا


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-2573.
Bazzar-Shamila-2966.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2599.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-30326-அலீ பின் ஃகுராப் என்பவர் பற்றி சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்…
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் மற்ற அறிஞர்களின் கூற்றுகளை வைத்து இவரை ஸதூக்-நம்பகமானவர் என்ற தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/703)

  • ஹிஷாம் அவர்களிடமிருந்து இந்த செய்தியை அறிவிப்பவர்கள், நபித்தோழரின் கூற்றாக அறிவித்துள்ளனர். அலீ பின் ஃகுராப் தான் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார் என்று இந்த செய்தியை பதிவு செய்த பஸ்ஸார் அவர்கள் கூறியுள்ளார். அலீ பின் ஃகுராப் தத்லீஸ் செய்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். என்றாலும் இதில் தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை அபூஉபைதா அவர்களிடமிருந்து யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்கள் நபித்தோழரின் செயலாக அறிவித்துள்ளார்.

ஹுதைஃபா (ரலி) அவர்கள் ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள். அதில் அரபியல்லாதவர்களின் சில நடைமுறைகளைக் கண்டு “யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்” என்று கூறிவிட்டு அதில் கலந்துகொள்ளாமல் வெளியேறி விட்டார்கள்.

(அல்வரஃ லிஅஹ்மத்-586)

  • நபித்தோழரின் இந்த செயலும், அவர் கூறியதும் அவர் சுயமாக கூறியிருக்க முடியாது என்பதால் சிலர் இந்த செய்தியை நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த செய்தி மேற்கண்ட செய்தியை மேலும் பலப்படுத்துகிறது.
  • மேலும் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) வழியாக வரும் செய்தியின் மூலம் (அதாவது இந்த இரண்டு ஹஸன் தரத்தில் உள்ள செய்திகள் இணைவதால்) இது ஸஹீஹுன் லிகைரிஹீ ஆகும்.

2 . இந்தக் கருத்தில் ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-2966 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8327 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-4031 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.