தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1145

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


பாடம் : 14

இரவின் கடைசி நேரத்தில் பிரார்த்திப்பதும் தொழுவதும்.

அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள் இரவில் குறைவாகவே உறங்குவார்கள். அதிகாலை முன்னேரங்களில் பாவமன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். (51:17,18) 

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்’.
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book : 19

(புகாரி: 1145)

بَابُ الدُّعَاءِ فِي الصَّلاَةِ مِنْ آخِرِ اللَّيْلِ
وَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ} [الذاريات: 17]
[ص:53]: أَيْ مَا يَنَامُونَ {وَبِالأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ} [الذاريات: 18]

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَأَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي، فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ


Bukhari-Tamil-1145.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1145.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  • அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருந்தான் என்ற கருத்தில் (7:54 13:2 20:5 25:59 32:4 57:4) ஆகிய வசனங்களிலும் ஏராளமான நபிமொழிகளிலும் இடம்பெற்றிருக்கிறது.
  • அல்லாஹ் இறங்கி வருகிறான் எனும் இந்தச் செய்தியை நேரடிப் பொருளில் புரிந்து கொண்டால் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் எனும் கருத்துடைய இவையனைத்தையும் மறுக்கும் நிலை ஏற்படும். எனவே அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அவனே இறங்குவதில்லை. அவனது அருள் இறங்குகிறது என்று பொருளாகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : மாலிக்-570 , அஹ்மத்-7592 , … தாரிமீ-1519 , 1520 , புகாரி-1145 , 6321 , 7494 ,  முஸ்லிம்-1386 , 13871388 , 1389 , 1390 , இப்னு மாஜா-1366 , அபூதாவூத்-1315 , 4733 , திர்மிதீ-446 , 3498 , அல்அதபுல் முஃப்ரத்-753 , …

கூடுதல் தகவல் பார்க்க : அல்லாஹ்வின் பண்பு .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.