தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1503

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 70 நோன்புப் பெருநாள் தர்மம் (ஸதக்கத்துல் ஃபித்ர்) கடமை ஆகும்.

நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாகுமென அபுல் ஆலியா, அதாஉ, இப்னுசீரீன் (ரஹ் அலைஹிம்) கருதுகின்றனர். 

 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.
Book : 24

(புகாரி: 1503)

أَبْوَابُ صَدَقَةِ الفِطْرِ

بَابُ فَرْضِ صَدَقَةِ الفِطْرِ

وَرَأَى أَبُو العَالِيَةِ، وَعَطَاءٌ، وَابْنُ سِيرِينَ «صَدَقَةَ الفِطْرِ فَرِيضَةً»

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

«فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى العَبْدِ وَالحُرِّ، وَالذَّكَرِ وَالأُنْثَى، وَالصَّغِيرِ وَالكَبِيرِ مِنَ المُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ»


Bukhari-Tamil-1503.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1503.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-773 , 775 , அஹ்மத்-4486 , 5174 , 5303 , 5339 , 5345 , 5781 , 5942 , 6214 , 6389 , 6429 , தாரிமீ-1702 , 1703 , புகாரி-1503 , 1504 , 1507 , 1509 , 1511 , 1512 , முஸ்லிம்-1791 , 1792 , 1793 , 1794 , 1795 , 1801 , 1802 , இப்னு மாஜா-18251826 , அபூதாவூத்-1610 , 1611 , 1613 , 1614 , 1615 , திர்மிதீ-675 , 676 , 677 , நஸாயீ-2500 , 2501 , 2502 , 2503 , 2504 , 2505 , 2516 , 2521 ,

2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1609 .

1 comment on Bukhari-1503

  1. நோன்புப் பெருநாள் தர்மம் (ஸதக்கத்துல் ஃபித்ர்) குறித்து வரும் ஹதீஸ்களில் (1503-1508), “شَعِير” என்ற வார்த்தைக்கு “தீட்டாத கோதுமை” என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு “பார்லி” என்று ஆங்கில மொழி பெயர்ப்பிலும், Dictionary யிலும் உள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.