தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1679

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அஸ்மா(ரலி) அவர்களின் ஊழியர் அப்துல்லாஹ் அவர்கள் அறிவித்தார்.

அஸ்மா(ரலி) முஸ்தலிஃபாவில் தங்க வேண்டிய இரவில் அங்கு தங்கினார்கள். பிறகு எழுந்து சிறிது நேரம் தொழுதுவிட்டு, ‘மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?’ எனக் கேட்டார்கள். நான் ‘இல்லை!’ என்றதும், சிறிது நேரம் தொழுதார்கள். பிறகு ‘சந்திரன் மறைந்துவிட்டதா?’ எனக் கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றதும் ‘புறப்படுங்கள்!’ எனக் கூறினார்கள்.

நாங்கள் புறப்பட்டு வந்ததும் ஜம்ராவில் அவர்கள் கல் எறிந்தார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து தம் கூடாரத்தில் ஸுப்ஹு தொழுதார்கள். அப்போது நான், ‘அம்மா! நாம் விஷயம் முன்பே வந்து விட்டதாகத் தெரிகிறதே!’ என்றேன். அதற்கவர்கள், ‘மகனே! நபி(ஸல்) அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு வர அனுமதி வழங்கியுள்ளார்கள்’ என்றார்கள்.
Book :25

(புகாரி: 1679)

حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، مَوْلَى أَسْمَاءَ، عَنْ أَسْمَاءَ

أَنَّهَا نَزَلَتْ لَيْلَةَ جَمْعٍ عِنْدَ المُزْدَلِفَةِ، فَقَامَتْ تُصَلِّي، فَصَلَّتْ سَاعَةً ثُمَّ قَالَتْ: «يَا بُنَيَّ، هَلْ غَابَ القَمَرُ؟»، قُلْتُ: لاَ، فَصَلَّتْ سَاعَةً ثُمَّ قَالَتْ: «يَا بُنَيَّ هَلْ غَابَ القَمَرُ؟»، قُلْتُ: نَعَمْ، قَالَتْ: «فَارْتَحِلُوا»، فَارْتَحَلْنَا وَمَضَيْنَا، حَتَّى رَمَتِ الجَمْرَةَ، ثُمَّ رَجَعَتْ فَصَلَّتِ الصُّبْحَ فِي مَنْزِلِهَا، فَقُلْتُ لَهَا: يَا هَنْتَاهُ مَا أُرَانَا إِلَّا قَدْ غَلَّسْنَا، قَالَتْ: «يَا بُنَيَّ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذِنَ لِلظُّعُنِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.