தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1736

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 131 ஜம்ராவில், வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டிருக்கும் போது (மக்களுக்குத்) தீர்ப்பளித்தல். 

 அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது (தம் வாகனத்தின் மீது) அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் (சில சந்தேகங்களை) கேட்கத் தொடங்கினர். ஒருவர், ‘நான் பலியிடுவதற்கு முன்பாக, உணராமல் தலையை மழித்து விட்டேன்!’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை! (இப்போது பலிப்பிராணியை) அறுப்பீராக!’ என்று கூறினார்கள்.

பிறகு இன்னொருவர் வந்து ‘கல்லெறிவதற்கு முன்பு அறியாமையினால் அறுத்து பலியிட்டுவிட்டேன்’ எனக் கூறியதும் அவர்கள் ‘குற்றமில்லை! இப்போது கல்லெறிவீராக!’ என்று கூறினார்கள். அன்றைய தினம் (பிற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில வழிபாடுகள் முன்னதாகச் செய்யப்பட்டு விட்டதாகவும் (முன்னதாகச் செய்யப்படவேண்டிய) சில வழிபாடுகள் பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் கேட்கப்பட்ட அனைத்திற்கும் நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை! (விடுபட்டத்தைச்) செய்வீராக!’ என்றே கூறினார்கள்.
Book : 25

(புகாரி: 1736)

بَابُ الفُتْيَا عَلَى الدَّابَّةِ عِنْدَ الجَمْرَةِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَفَ فِي حَجَّةِ الوَدَاعِ، فَجَعَلُوا يَسْأَلُونَهُ، فَقَالَ رَجُلٌ: لَمْ أَشْعُرْ، فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ، قَالَ: «اذْبَحْ وَلاَ حَرَجَ»، فَجَاءَ آخَرُ فَقَالَ: لَمْ أَشْعُرْ فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، قَالَ: «ارْمِ وَلاَ حَرَجَ»، فَمَا سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَيْءٍ قُدِّمَ وَلاَ أُخِّرَ إِلَّا قَالَ: «افْعَلْ وَلاَ حَرَجَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.