தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1982

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 61 ஒரு கூட்டத்தாரிடம் சென்று, அங்கு நோன்பை முறிக்காமல் இருத்தல்.

 அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு ஸுலைம்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர்கள் பேரீச்சம் பழங்களையும் நெய்யையும் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் நெய்யை அதற்குரிய (தோல்) பாத்திரத்திலேயே ஊற்றுங்கள்; உங்கள் பேரீச்சம் பழங்களை அதற்குரிய பையில் போடுங்கள்; ஏனெனில், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்!’ என்றார்கள்.

பிறகு வீட்டின் ஒரு மூலையில் நின்று கடமையல்லாத தொழுகையைத் தொழுதார்கள். உம்மு ஸுலைம்(ரலி) அவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தித்தார்கள். அப்போது உம்மு ஸுலைம்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு விருப்பமான ஒன்று உள்ளது’! என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அது என்ன?’ என்று கேட்டார்கள் ‘உங்கள் ஊழியர் அனஸ்தான்!’ என்று உம்மு ஸுலைம்(ரலி) கூறினார்.

இம்மை மறுமையின் எந்த நன்மையையும்விட்டு விடாமல் (எல்லா நன்மைகளையும்) கேட்டு. எனக்காக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். ‘இறைவா! இவருக்குப் பொருட் செல்வத்தையும் குழந்தைச் செல்வத்தையும் வழங்கு! இவருக்கு பரக்கத் செய்!’ என்று பிரார்த்தித்தார்கள். இன்று நான் அன்ஸார்களிலேயே அதிகச் செல்வந்தனாக இருக்கிறேன்! எனக்குப் பிறந்த நூற்றியிருபதுக்கும் அதிகமான பிள்ளைகள் இறந்து, ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப்) பஸராவுக்கு வந்த காலத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டனர் என்று என் மகள் உமைனா எனக்குக் கூறினார்.
Book : 30

(புகாரி: 1982)

بَابُ مَنْ زَارَ قَوْمًا فَلَمْ يُفْطِرْ عِنْدَهُمْ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنِي خَالِدٌ هُوَ ابْنُ الحَارِثِ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى أُمِّ سُلَيْمٍ، فَأَتَتْهُ بِتَمْرٍ وَسَمْنٍ، قَالَ: «أَعِيدُوا سَمْنَكُمْ فِي سِقَائِهِ، وَتَمْرَكُمْ فِي وِعَائِهِ، فَإِنِّي صَائِمٌ» ثُمَّ قَامَ إِلَى نَاحِيَةٍ مِنَ البَيْتِ، فَصَلَّى غَيْرَ المَكْتُوبَةِ، فَدَعَا لِأُمِّ سُلَيْمٍ وَأَهْلِ بَيْتِهَا، فَقَالَتْ أُمُّ سُلَيْمٍ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي خُوَيْصَّةً، قَالَ: «مَا هِيَ؟»، قَالَتْ: خَادِمُكَ أَنَسٌ، فَمَا تَرَكَ خَيْرَ آخِرَةٍ وَلاَ دُنْيَا إِلَّا دَعَا لِي بِهِ، قَالَ: «اللَّهُمَّ ارْزُقْهُ مَالًا وَوَلَدًا، وَبَارِكْ لَهُ فِيهِ»، فَإِنِّي لَمِنْ أَكْثَرِ الأَنْصَارِ مَالًا،

وَحَدَّثَتْنِي ابْنَتِي أُمَيْنَةُ: أَنَّهُ دُفِنَ لِصُلْبِي مَقْدَمَ حَجَّاجٍ البَصْرَةَ بِضْعٌ وَعِشْرُونَ وَمِائَةٌ

حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي حُمَيْدٌ، سَمِعَ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.