தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2681

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளையிடுவது.

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள்.

( அல்லாஹ் கூறுகின்றான்:) (நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராக இருந்தார். (19:54)

(கூஃபா நகர நீதிபதியான) இப்னு அஷ்வஃ (ரஹ்) அவர்கள், வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம் என்று தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பை அவர், சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து (கேட்டுக்) கூறினார்.

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் மருமகனை (மகள் ஸைனபின் கணவரான அபுல் ஆஸ் பின் ரபீஉ (ரலி) என்பாரை) நினைவு கூர்ந்து, அவர் எனக்கு வாக்குறுதியளித்து, அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார் என்று கூறினார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:

நான், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ராஹவைஹீ (ரஹ்) அவர்கள், இப்னுல் அஷ்வஃ (ரஹ்) அவர்களுடைய இந்த ஹதீஸை ஆதாரம் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அபூ சுஃப்யான்(ரலி) என்னிடம் கூறினார்:

(ரோம மன்னர்) ஹிராக்ளியஸ் என்னைப் பார்த்து, ‘உம்மிடம், ‘அவர் (முஹம்மது – ஸல்) எதையெல்லாம் கட்டளையிடுகிறார்?’ என்று கேட்டேன். நீர், ‘அவர் தொழுகை தொழும்படியும், வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கைக் கொள்ளும் படியும், ஒப்பந்தத்தையும், வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளையிடுகிறார்’ என்று சொன்னீர். இதுதான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும்’ என்று கூறினார்.
Book : 52

(புகாரி: 2681)

بَابُ مَنْ أَمَرَ بِإِنْجَازِ الوَعْدِ

وَفَعَلَهُ الحَسَنُ وَذَكَرَ إِسْمَاعِيلَ: {إِنَّهُ كَانَ صَادِقَ الوَعْدِ} [مريم: 54]

وَقَضَى ابْنُ الأَشْوَعِ، بِالوَعْدِ وَذَكَرَ ذَلِكَ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ وَقَالَ المِسْوَرُ بْنُ مَخْرَمَةَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَكَرَ صِهْرًا لَهُ، قَالَ: «وَعَدَنِي فَوَفَى لِي»

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «وَرَأَيْتُ إِسْحَاقَ بْنَ إِبْرَاهِيمَ يَحْتَجُّ بِحَدِيثِ ابْنِ أَشْوَعَ»

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَخْبَرَهُ قَالَ: أَخْبَرَنِي أَبُو سُفْيَانَ

أَنَّ هِرَقْلَ قَالَ لَهُ: سَأَلْتُكَ مَاذَا يَأْمُرُكُمْ؟ فَزَعَمْتَ: «أَنَّهُ أَمَرَكُمْ بِالصَّلاَةِ، وَالصِّدْقِ، وَالعَفَافِ، وَالوَفَاءِ بِالعَهْدِ، وَأَدَاءِ الأَمَانَةِ»، قَالَ: وَهَذِهِ صِفَةُ نَبِيٍّ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.