தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2769

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


பாடம் : 26 ஒருவர் ஒரு நிலத்தை வக்ஃபு செய்யும் போது அதன் எல்லைகளை விளக்கிக் கூறா விட்டாலும் அவரது வக்ஃபு செல்லும். தருமமும் அவ்வாறே (செல்லும்).

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

அபூ தல்ஹா(ரலி) மதீனா நகர அன்சாரிகளிலேயே நிறையப் பேரீச்சந் தோட்டங்களை சொத்துகளாகப் பெற்றிருந்தார். மஸ்ஜிதுந் நபவிக்கு எதிரே அமைந்திருந்த ‘பைருஹா’ தோட்டம் தான் அவரின் சொத்துக்களிலேயே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அ(ந்தத் தோட்டத்)தில் நுழைந்து அதிலிருந்த நல்ல (சுவையான) தண்ணீரைப் பருகுவார்கள். ‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது’ என்னும் (திருக்குர்ஆன் 03:92) இறைவசனம் அருளப்பட்டபோது

அபூ தல்ஹா(ரலி) எழுந்து நின்று, ‘இறைத்தூதர் அவர்களே! ‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாதவரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது’ என்று அல்லாஹ் கூறினான். என் சொத்துக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது ‘பைருஹா’ தான். அதை அல்லாஹ்வுக்காக நான் தருமம் செய்து விடுகிறேன். அல்லாஹ்விடம் அதன் நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக அது இருப்பதையும் விரும்புகிறேன். எனவே, அல்லாஹ் தங்களுக்குக் கட்டளையிடுகிற விஷயத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘ஆகா! அது (மறுமையில்) லாபம் தரும் செல்வமாகிவிட்டதே! அல்லது அது (அழிந்து) போய்விடும் செல்வம் தானே! (நல்ல காரியத்தில் தான் போகட்டுமே!) {…இப்படி அறிவிப்பாளர் இப்னு மஸ்லமா(ரஹ்) சந்தேகத்துடன் கூறினார்…} நீ கூறியதை கேட்டேன்.

அதை (உன்) நெருங்கிய உறவினர்களுக்கிடையே நீ பங்கிட்டு விடுவதையே நான் பொறுத்தமானதாகக் கருதுகிறேன்’ என்று கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா(ரலி), ‘அவ்வாறே நான் செய்கிறேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறிவிட்டு, தம் நெருங்கிய உறவினர்களுக்கும் தம் தந்தையின் உடன்பிறந்தார் மக்களுக்குமிடையே அதைப் பங்கிட்டுவிட்டார்கள்.

மற்றோர் அறிவிப்பிலும், ‘(அழிந்து) போய் விடும் செல்வம் தானே’ என்று வந்துள்ளது.
Book : 55

(புகாரி: 2769)

بَابُ إِذَا وَقَفَ أَرْضًا وَلَمْ يُبَيِّنِ الحُدُودَ فَهُوَ جَائِزٌ، وَكَذَلِكَ الصَّدَقَةُ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ

كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ أَنْصَارِيٍّ بِالْمَدِينَةِ مَالًا مِنْ نَخْلٍ، أَحَبُّ مَالِهِ إِلَيْهِ بَيْرُحَاءَ، مُسْتَقْبِلَةَ المَسْجِدِ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ، قَالَ أَنَسٌ: فَلَمَّا نَزَلَتْ: {لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [آل عمران: 92]، قَامَ أَبُو طَلْحَةَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ يَقُولُ: {لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [آل عمران: 92] وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَيَّ بَيْرُحَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ، فَضَعْهَا حَيْثُ أَرَاكَ اللَّهُ، فَقَالَ: «بَخْ، ذَلِكَ مَالٌ رَابِحٌ أَوْ رَايِحٌ – شَكَّ ابْنُ مَسْلَمَةَ – وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ، وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ»، قَالَ أَبُو طَلْحَةَ: أَفْعَلُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ، فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ، وَفِي بَنِي عَمِّهِ، وَقَالَ إِسْمَاعِيلُ، وَعَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، وَيَحْيَى بْنُ يَحْيَى: عَنْ مَالِكٍ: «رَايِحٌ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.