தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2786

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 அல்லாஹ்வின் பாதையில் உயிரையும், உடைமையையும் அர்ப்பணித்துப் பேராடும் இறை நம்பிக்கையாளரே மனிதர்களில் சிறந்தவராவார்.

அல்லாஹ் கூறுகின்றான்:

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களைத் துன்புறுத்தும் வேதனையிலிருந்து காப்பாற்றக் கூடிய ஒரு வியாபாரத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? (அது தான்) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்வதும் அல்லாஹ்வின் பாதையில் உங்கள் உடைமை களாலும் உயிர்களாலும் போராடுவதும் ஆகும். (இதனால் கிடைக்கும் பெரும் நன்மையை) நீங்கள் அறிவீர்களாயின் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.

உங்கள் பாவங்களை மன்னித்து , கீழே நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்க(த் தோட்ட)ங்களில் உங்களை அவன் புகுத்துவான்; நிலையான சொர்க்கங்களில் சிறந்த வீடுகளையும் உங்களுக்குத் தருவான். அதுவே மகத்தான வெற்றியாகும். (61:10-12)

 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் சிறந்தவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறைவழியில் தன் உயிராலும் தன் பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)’ என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘பிறகு யார்?’ என்று கேட்டார்கள். ‘மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக் கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தன்னால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
Book : 56

(புகாரி: 2786)

بَابٌ: أَفْضَلُ النَّاسِ مُؤْمِنٌ مُجَاهِدٌ بِنَفْسِهِ وَمَالِهِ فِي سَبِيلِ اللَّهِ

وَقَوْلُهُ تَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا، هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ، تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ، وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ، ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ، يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ، وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ، وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ، ذَلِكَ الفَوْزُ العَظِيمُ} [الصف: 11]

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، أَنَّ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ، حَدَّثَهُ قَالَ

قِيلَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَفْضَلُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُؤْمِنٌ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ بِنَفْسِهِ وَمَالِهِ»، قَالُوا: ثُمَّ مَنْ؟ قَالَ: «مُؤْمِنٌ فِي شِعْبٍ مِنَ الشِّعَابِ يَتَّقِي اللَّهَ، وَيَدَعُ النَّاسَ مِنْ شَرِّهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.