தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2819

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 23

இறைவழியில் போர் புரிவதற்காக குழந்தை வேண்டுமென்று கோருதல்.

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள் (ஒரு முறை), ‘நான் இன்றிரவு (என்னுடைய) நூறு அல்லது தொண்ணூற்றொன்பது – மனைவிகளிடமும் சென்று (உடலுறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருத்தியும் இறைவழியில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பாள்’ என்று கூறினார்கள். அவர்களின் தோழர் ஒருவர், (அவர்கள் மறந்திருக்கலாம் என்று கருதி) ‘இன்ஷா அல்லாஹ் – அல்லாஹ் நாடினால்.. என்று சொல்லுங்கள்’ என்று கூறினார்.

சுலைமான் (அலை) அவர்கள் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று (தம் வாயால்) கூறாமலிருந்துவிட்டார்கள். எனவே, (அவர்களின் மனைவிமார்களில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்படையவில்லை. அவரும் ஒரு புஜமுடைய பாதி மனிதரைத் தான் பெற்றெடுத்தார்.

முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அவர், ‘இன்ஷா அல்லாஹ் – அல்லாஹ் நாடினால்’ என்று (தம் வாயாலும்) கூறியிருந்தால் (அந்த நூறு மனைவியரும் கர்ப்பமுற்றுப் பிள்ளைகள் பெற, அப்பிள்ளைகள்) அனைவருமே இறைவழியில் அறப்போர் புரிகிற வீரர்களாய் ஆகியிருப்பார்கள். என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book : 56

(புகாரி: 2819)

بَابُ مَنْ طَلَبَ الوَلَدَ لِلْجِهَادِ

وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ عَلَيْهِمَا السَّلاَمُ: لَأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى مِائَةِ امْرَأَةٍ، أَوْ تِسْعٍ وَتِسْعِينَ كُلُّهُنَّ، يَأْتِي بِفَارِسٍ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، فَقَالَ لَهُ صَاحِبُهُ: إِنْ شَاءَ اللَّهُ، فَلَمْ يَقُلْ إِنْ شَاءَ اللَّهُ، فَلَمْ يَحْمِلْ مِنْهُنَّ إِلَّا امْرَأَةٌ وَاحِدَةٌ، جَاءَتْ بِشِقِّ رَجُلٍ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَوْ قَالَ: إِنْ شَاءَ اللَّهُ، لَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ، فُرْسَانًا أَجْمَعُونَ


Bukhari-Tamil-2819.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2819.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  1. இதன் அறிவிப்பாளர் தொடரில் எந்த குறையும் இல்லை.
  2. எனினும், இந்த ஹதீஸின் கருத்து, குர்ஆனுக்கும், இஸ்லாமிய அடிப்படைகளுக்கும் முரணாக உள்ளது. கூடுதல் விளக்கம் பார்க்க: சுலைமான் நபியைக் கொச்சைப்படுத்தலாமா? .
  3. மாற்றுக்கருத்து உடையவர்கள் விளக்கத்தை முழுமையாக படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை (1) கண்ணியமான முறையில், (2) ஆதாரத்துடன், (3) சுருக்கமாக பதிவு செய்யவும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-7137 , 7715 , 10580 , புகாரி-2819 , 3424 , 6639 , 6720 , 7469 , முஸ்லிம்-, திர்மிதீ-, நஸாயீ-3831 , 3856 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.