தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2822

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புத் தேடுதல்.

 அம்ர் இப்னு மைமூன் அல் அவ்தீ(ரஹ்) கூறினார்.

ஆசிரியர் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போன்று, ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்;

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வஅஊது பிக்க மின் அதாபில் கப்ரி –

‘இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; மூப்பின் மோசமான நிலையை அடைவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; புதைகுழியின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்’

என்று கூறிவிட்டு, ‘இந்த விஷயங்களிலிருந்தெல்லாம் நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்’ என்றும் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் மலிக் இப்னு உமைர்(ரஹ்) கூறினார்:
இந்த ஹதீஸை நான் முஸ்அப்(ரஹ்) அவர்களிடம் அறிவித்தேன். இது உண்மையானது தான் என அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
Book : 56

(புகாரி: 2822)

بَابُ مَا يُتَعَوَّذُ مِنَ الجُبْنِ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ عُمَيْرٍ، سَمِعْتُ عَمْرَو بْنَ مَيْمُونٍ الأَوْدِيَّ، قَالَ

كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلاَءِ الكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ المُعَلِّمُ الغِلْمَانَ الكِتَابَةَ وَيَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ مِنْهُنَّ دُبُرَ الصَّلاَةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ العُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ»،

فَحَدَّثْتُ بِهِ مُصْعَبًا فَصَدَّقَهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.