தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2842

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று, ‘எனக்குப் பின், உங்களின் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் பூமியின் அருள்வளங்கள் உங்களுக்குத் திறந்துவிடப்பட விருப்பதைத்தான்’ என்று கூறிவிட்டு, உலகின் அழகையும் செழிப்பையும் கூறினார்கள்.

(அவற்றில்) முதலில் ஒன்றைக் கூறி, பிறகு மற்றொன்றை இரண்டாவதாகக் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (செல்வம் என்ற) நன்மை, தீமையைக் கொண்டு வருமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் அவருக்கு பதிலளிக்காமல் மெளனமாக இருந்தார்கள். இதைக் கண்ட நாங்கள், ‘நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (வேத வெளிப்பாடு) அருளப்படுகிறது’ என்று கூறிக் கொண்டோம். மக்கள் அனைவரும் தம் தலைகளில் பறவைகள் அமர்ந்திருப்பது போல் (ஆடாமல் அசையாமல்) மெளனமாக இருந்தனர்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் தம் முகத்திலிருந்து (வழிந்த) வியர்வையைத் துடைத்துவிட்டு, ‘சற்று முன்பு கேள்வி கேட்டவர் எங்கே? (செல்வம்) ஒரு நன்மையா?’ என்று மூன்று முறை கூறினார்கள். பிறகு, ‘(உண்மையிலேயே) நன்மை(யாக இருக்கும் ஒரு பொருள்) நன்மையைத் தவிர வேறெதையும் கொண்டு வராது தான். மேலும், நீர்நிலைகளின் கரைகளில் தாவரங்கள் விளையும் போதெல்லாம் அவற்றைக் கால்நடைகள் மேய (அவை நச்சுத் தன்மையுடைய புற்பூண்டுகளையும் சேர்த்துத் தின்பதாலும் அதிகமாகத் தின்று விடுவதாலும்) அவை அவற்றை வயிற்று நோயால் கொன்று விடுகின்றன அல்லது மரணத்தின் விளிம்புக்கே கொண்டு போகின்றன. பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களை (தாங்கும் அளவுக்கு) உண்பவற்றைத் தவிர அவை அவற்றை வயிறு நிரம்ப உண்டு, சூரியனை (வெப்பத்திற்காக) முன்னோக்கி நிற்கின்றன. பிறகு சாணம் போட்டு சிறுநீர் கழித்துவிட்டு (செரித்தவுடன்) மீண்டும் மேய்கின்றன.

(இவ்வாறே) இச்செல்வமும் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். அதை முறைப்படி அடைந்து, அதை அல்லாஹ்வின் பாதையிலும் அனாதைகளுக்காகவும் ஏழை எளியவர்களுக்காகவும் செலவிட்ட முஸ்லிமுக்கு அச்செல்வம் சிறந்த தோழனாகும். அதை முறைப்படி அடையாதவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவன் ஆவான். அச்செல்வம் மறுமை நாளில் அவனுக்கெதிராக சாட்சி சொல்லும்’ என்று கூறினார்கள்.
Book :56

(புகாரி: 2842)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، حَدَّثَنَا هِلاَلٌ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ عَلَى المِنْبَرِ، فَقَالَ: «إِنَّمَا أَخْشَى عَلَيْكُمْ مِنْ بَعْدِي مَا يُفْتَحُ عَلَيْكُمْ مِنْ بَرَكَاتِ الأَرْضِ»، ثُمَّ ذَكَرَ زَهْرَةَ الدُّنْيَا، فَبَدَأَ بِإِحْدَاهُمَا، وَثَنَّى بِالأُخْرَى، فَقَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَوَيَأْتِي الخَيْرُ بِالشَّرِّ؟ فَسَكَتَ عَنْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْنَا: يُوحَى إِلَيْهِ، وَسَكَتَ النَّاسُ كَأَنَّ عَلَى رُءُوسِهِمُ الطَّيْرَ، ثُمَّ إِنَّهُ مَسَحَ عَنْ وَجْهِهِ الرُّحَضَاءَ، فَقَالَ: «أَيْنَ السَّائِلُ آنِفًا، أَوَخَيْرٌ هُوَ – ثَلاَثًا – إِنَّ الخَيْرَ لاَ يَأْتِي إِلَّا بِالخَيْرِ، وَإِنَّهُ كُلَّمَا يُنْبِتُ الرَّبِيعُ مَا يَقْتُلُ حَبَطًا أَوْ يُلِمُّ إِلَّا آكِلَةَ الخَضِرِ، كُلَّمَا أَكَلَتْ حَتَّى إِذَا امْتَلَأَتْ خَاصِرَتَاهَا، اسْتَقْبَلَتِ الشَّمْسَ، فَثَلَطَتْ وَبَالَتْ، ثُمَّ رَتَعَتْ، وَإِنَّ هَذَا المَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، وَنِعْمَ صَاحِبُ المُسْلِمِ لِمَنْ أَخَذَهُ بِحَقِّهِ، فَجَعَلَهُ فِي سَبِيلِ اللَّهِ، وَاليَتَامَى وَالمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ، وَمَنْ لَمْ يَأْخُذْهُ بِحَقِّهِ، فَهُوَ كَالْآكِلِ الَّذِي لاَ يَشْبَعُ، وَيَكُونُ عَلَيْهِ شَهِيدًا يَوْمَ القِيَامَةِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.