தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-320

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19

மாதவிடாய் ஆரம்பிப்பதும் நிற்பதும்.

சில பெண்கள் (தங்கள் மாதவிடாய் இரத்தம் நின்றுவிட்டதா என்பதை அறிய) மாதவிடாய் காலத்தில் அணையாடைக்குள் பயன்படுத்திய பஞ்சை ஒரு சிறிய கூடைக்குள் வைத்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்தனர். அந்தப் பஞ்சில் மஞ்சள் நிறம் இருந்தது. (இதைக் காணும்) ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த பஞ்சில் (நிறமேதும் படாமல்) வெள்ளை நிறமாகக் காணும் வரை நீங்கள் அவசரப்பட்டுவிடாதீர்கள் என் றார்கள். அதாவது மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து விட்டதாகக் கருதிவிடாதீர்கள் என்றார்கள்.

சில பெண்கள் நடு நிசி நேரத்தில் விளக்குகளைக் கொண்டு வரச் சொல்லி மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து விட்டோமா என்பதை (சிரமப்பட்டு) பார்க்கிறார்கள் என்ற செய்தி ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் புதல்விக்கு எட்டியது. அப்போது அவர் (நபி (ஸல்)  அவர்களது காலத்தில் வாழ்ந்த) அந்தப் பெண்கள் இப்படிச் செய்ததில்லை என்று கூறி அச்சிலரைக் கடிந்து கொண்டார்கள்.

  ‘பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் உதிரப் போக்குடையவராக இருந்தார். நபி(ஸல்) அவர்களிடம் அப்பெண் (இது குறித்து) கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அது ஒரு நரம்பு நோய். அது மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டுத் தொழுது கொள்’ என்று கூறினார்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 6

(புகாரி: 320)

بَابُ إِقْبَالِ المَحِيضِ وَإِدْبَارِهِ

وَكُنَّ نِسَاءٌ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ بِالدُّرَجَةِ فِيهَا الكُرْسُفُ فِيهِ الصُّفْرَةُ، فَتَقُولُ: «لاَ تَعْجَلْنَ حَتَّى تَرَيْنَ القَصَّةَ البَيْضَاءَ» تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنَ الحَيْضَةِ

وَبَلَغَ بِنْتَ زَيْدِ بْنِ ثَابِتٍ: أَنَّ نِسَاءً يَدْعُونَ بِالْمَصَابِيحِ مِنْ جَوْفِ اللَّيْلِ يَنْظُرْنَ إِلَى الطُّهْرِ، فَقَالَتْ: «مَا كَانَ النِّسَاءُ يَصْنَعْنَ هَذَا وَعَابَتْ عَلَيْهِنَّ»

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ

كَانَتْ تُسْتَحَاضُ، فَسَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ذَلِكِ عِرْقٌ وَلَيْسَتْ بِالحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الحَيْضَةُ، فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وَصَلِّي»


Bukhari-Tamil-320.
Bukhari-TamilMisc-320.
Bukhari-Shamila-320.
Bukhari-Alamiah-309.
Bukhari-JawamiulKalim-312.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.