தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3346

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்.

அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே!), இவர்கள்(யூதர்கள்) உங்களிடம் துல்கர்னைன் பற்றி கேட்கிறார்கள். நீங்கள் கூறுங்கள்: நான் அவரைப் பற்றிய சில விபரங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்வேன். திண்ணமாக நாம் அவருக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை அளித்திருந்தோம். மேலும், அவருக்கு எல்லாவிதமான சாதனங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியிருந்தோம். அவர் (ஒரு முக்கியமான காரியத்திற்காக முதலில் மேற்கு நோக்கிப்) புறப்பட்டார்.

சூரியன் அஸ்தமிக்கும் எல்லையை அவர் அடைந்த போது சேற்றுக் கடலில் அது அஸ்தமிப்பதை(ப் போல்) கண்டார். அங்கு அவர், ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார். அப்போது நாம் கூறினோம்: துல்கர்னைனே! அவர்களைத் தண்டிக்கவும் உமக்கு ஆற்றல் இருக்கிறது. அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளவும் உம்மால் முடியும். அதற்கு அவர் கூறினார்: யாரேனும் அக்கிரமம் புரிந்தால் அவரைத் தண்டிப்போம். பிறகு, அவர் தன்னுடைய இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவார். அவன் அவருக்கு இன்னும் கடுமையாகத் தண்டனை அளிப்பான்.

ஆனால், அவர்களில் எவர் இறை நம்பிக்கை கொண்டு, நற்செயலும் புரிகின்றாரோ அவருக்கு நற்பலன் இருக்கிறது. நாம் அவருக்கு எளிதான கட்டளைகளையே வழங்குவோம். மீண்டும் அவர், (மற்றொரு முக்கியமான காரியத்திற்காகப்) புறப்பட்டார். சூரியன் உதயமாகும் எல்லையை அவர் அடைந்து விட்டார். அப்போது அது ஒரு சமுதாயத்தார் மீது உதிப்பதைக் கண்டார். அதன் வெயிலிலிருந்து தப்பிப்பதற்கான எந்தத் தடுப்பையும் நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கவில்லை.

இது தான் அச்சமுதாயத்தாரின் நிலை! துல்கர்னைனிடம் இருந்தவை அனைத்தையும் நாம் நன்கு அறிந்திருந்தோம். பிறகு அவர், (வேறொரு முக்கிய காரியத்தை முன்னிட்டு) புறப்பட்டார். அவர் இரு மலைகளுக்கிடையே சென்றார். அப் போது அவற்றின் அருகில் எந்தப் பேச்சையும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார். அம்மக்கள் கூறினார்கள்: துர்கர்னைனே! யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் இந்நாட்டில் (பரவலாக) அராஜகத்தை விளைவிக்கின்றார்கள். எனவே, நீங்கள் எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவரை எழுப்பித் தருவதற்காக நாங்கள் உமக்கு ஏதேனும் கப்பம் செலுத்த வேண்டுமா?.

அதற்கு அவர் பதிலளித்தார்: என்னடைய இறைவன் எனக்குக் கொடுத்திருப்பவை மேலானவை. எனவே, உங்கள் உழைப்பின் மூலம் எனக்கு உதவி செய்யுங்கள். நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு தடுப்புச்சுவரை எழுப்பித் தருகிறேன்; இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள். இறுதியில் இரு மலைகளுக் கிடையிலான பகுதியை நிரப்பி விட்ட அவர் (மக்களை நோக்கி) கூறினார்: இப்பொழுது (நெருப்பை மூட்டுவதற்காக) ஊதுங்கள்! கடைசியில் அந்த இரும்புச் சுவர் முற்றிலும் நெருப்பாய்ப் பழுக்கக் காய்ந்த போது அவர் கூறினார்: கொண்டு வாருங்கள்,இப்போது நான் உருக்கிய செம்புத்திரவத்தை! அதனைச் சுவற்றின் மேல் ஊற்றுவேன். யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரால் அதில் ஏறி வர முடியவில்லை. அவர்களால் அதில் துளையிடவும் இயலவில்லை. (அந்த அளவுக்கு அந்தச் சுவர் உயரமாகவும் வலுவாகவும் இருந்தது.)

துல்கர்னைன் கூறினார்: இது என்னுடைய இறைவனின் கருணையாகும். என் இறைவன் வாக்களித்த நேரம் வந்து விட்டால், அவன் இதனைத் தூள்தூளாக்கி விடுவான். என்னுடைய இறைவனின் வாக்குறுதி உண்மையானதாகும். (18:83-98)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: எதுவரையெனில், யஃஜூஜ் மஃஜூஜ் திறந்து விடப்பட்டு ஒவ்வொரு உயரமான இடங்களிலிருந்தும் அவர்கள் வெளியேறும் வரை. (21:96)

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், நான் அந்தத் தடுப்புச் சுவரை, பல வண்ணக் கோடுகள் போட்ட ஒரு துணியைப் போல் பார்த்தேன் என்று சொன்னார். அதற்கு நபியவர்கள், உண்மை தான்; நீங்கள் பார்த்தது என்று தெரிவித்தார்கள்.

 நபி(ஸல்) அவர்களின் துணைவியார்) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது’ என்று தம் கட்டை விரலையும் அதற்கடுததுள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள்.

உடனே, நான் ‘இறைத்தூதர் அவர்களே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்; தீமை பெருகிவிட்டால்..’ என்று பதிலளித்தார்கள்.
Book : 60

(புகாரி: 3346)

بَابُ قِصَّةِ يَأْجُوجَ، وَمَأْجُوجَ

وَقَوْلِ اللَّهِ تَعَالَى: قَالُوا {يَا ذَا القَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ، وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الأَرْضِ} [الكهف: 94] قَوْلُ اللَّهِ تَعَالَى {وَيَسْأَلُونَكَ عَنْ ذِي القَرْنَيْنِ قُلْ سَأَتْلُو عَلَيْكُمْ مِنْهُ ذِكْرًا. إِنَّا مَكَّنَّا لَهُ [ص:138] فِي الأَرْضِ وَآتَيْنَاهُ مِنْ كُلِّ شَيْءٍ سَبَبًا} [الكهف: 84]. (فَاتَّبَعَ سَبَبًا) – إِلَى قَوْلِهِ – (ائْتُونِي زُبَرَ الحَدِيدِ): «وَاحِدُهَا زُبْرَةٌ وَهِيَ القِطَعُ» {حَتَّى إِذَا سَاوَى بَيْنَ الصَّدَفَيْنِ} [الكهف: 96] يُقَالُ عَنْ ابْنِ عَبَّاسٍ: الجَبَلَيْنِ، وَالسُّدَّيْنِ الجَبَلَيْنِ {خَرْجًا} [الكهف: 94]: «أَجْرًا»، {قَالَ انْفُخُوا حَتَّى إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا} [الكهف: 96]: ” أَصْبُبْ عَلَيْهِ رَصَاصًا، وَيُقَالُ الحَدِيدُ، وَيُقَالُ: الصُّفْرُ ” وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «النُّحَاسُ» {فَمَا اسْطَاعُوا أَنْ يَظْهَرُوهُ} [الكهف: 97] ” يَعْلُوهُ، اسْتَطَاعَ اسْتَفْعَلَ، مِنْ أَطَعْتُ لَهُ، فَلِذَلِكَ فُتِحَ أَسْطَاعَ يَسْطِيعُ، وَقَالَ بَعْضُهُمْ: اسْتَطَاعَ يَسْتَطِيعُ “، وَمَا اسْتَطَاعُوا لَهُ نَقْبًا. (قَالَ هَذَا رَحْمَةٌ مِنْ رَبِّي فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي جَعَلَهُ دَكًّا): أَلْزَقَهُ بِالأَرْضِ، وَنَاقَةٌ دَكَّاءُ لاَ سَنَامَ لَهَا، وَالدَّكْدَاكُ مِنَ الأَرْضِ مِثْلُهُ، حَتَّى صَلُبَ وَتَلَبَّدَ، {وَكَانَ وَعْدُ رَبِّي حَقًّا. وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَئِذٍ يَمُوجُ فِي بَعْضٍ} [الكهف: 98] {حَتَّى إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ} [الأنبياء: 96] قَالَ قَتَادَةُ: ” حَدَبٌ: أَكَمَةٌ ” قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَأَيْتُ السَّدَّ مِثْلَ البُرْدِ المُحَبَّرِ، قَالَ: «رَأَيْتَهُ»

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ، حَدَّثَتْهُ عَنْ أُمِّ حَبِيبَةَ بِنْتِ أَبِي سُفْيَانَ، عَنْ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، رَضِيَ اللَّهُ عَنْهُنَّ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَيْهَا فَزِعًا يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ اليَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ» وَحَلَّقَ بِإِصْبَعِهِ الإِبْهَامِ وَالَّتِي تَلِيهَا، قَالَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ: أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟ قَالَ: «نَعَمْ إِذَا كَثُرَ الخَبَثُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.