தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3359

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

 உம்மு ஷரீக் (ரலி) அறிவித்தார்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள்.

மேலும், அவர்கள், ‘அது இப்ராஹீம் (அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது’ என்றும் கூறினார்கள்.
Book :60

(புகாரி: 3359)

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَوْ ابْنُ سَلاَمٍ عَنْهُ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الحَمِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أُمِّ شَرِيكٍ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

أَمَرَ بِقَتْلِ الوَزَغِ، وَقَالَ: كَانَ يَنْفُخُ عَلَى إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ


Bukhari-Tamil-3359.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3359.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  • மேற்கண்ட செய்தி அறிவிப்பாளர்தொடரில் சரியாக இருந்தாலும் அதன் இரண்டாவது பகுதி சில குர்ஆன் வசனங்களுக்கும், இஸ்லாமிய அடிப்படை கொள்கைக்கும் முரணாக இருப்பதால் கருத்தைக் கவனித்து அது பலவீனமானதாகும்.

1 . அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். (அல்குர்ஆன் 3 : 83)

2 . (பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். (அல்குர்ஆன் 6 : 164)

  • பல்லி இப்ராஹீம் நபிக்கு எதிராக நெருப்பை ஊதியது என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்.

இது உண்மையாக இருந்தால் எந்தப் பல்லி அவ்வாறு ஊதியதோ அந்தப் பல்லியைத் தானே கொல்ல வேண்டும். அந்தப் பல்லி செத்துப் போய் பல்லாயிரம் ஆண்டுகள் ஆன பின்னும் அதன் வழித்தோன்றல்களான பல்லியைக் கொல்ல இந்தக் காரணம் பொருந்துமா?

மேலும் இப்ராஹீம் நபியை நெருப்புக் குண்டத்தில் போடும்போது உலகத்தில் உள்ள பல்லிகள் எல்லாம் அந்த இடத்துக்கு வந்து இருக்க முடியாது. அந்தப் பல்லிகளையும் அதன் வழித்தோன்றல்களையும் ஏன் கொல்ல வேண்டும்?

குர்ஆனுக்கு முரணாக நபியவர்கள் இவ்வாறு பேசியிருப்பார்களா? சாதாரண மனிதன் கூட ஒருவர் செய்த தவறுக்காக மற்றவரைத் தண்டிக்க மாட்டான் எனும் போது அறிவின் சிகரமாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லி இருப்பார்களா?

எனவே பல்லியைக் கொல்லச் சொல்லும் காரணம் திருக்குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதாலும், உண்மைக்கு எதிராக இருப்பதாலும் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்கள் சொல்லாதது என்ற முடிவுக்கு நாம் வந்தாக வேண்டும்.

கூடுதல் தகவல் பார்க்க: இப்ராஹீம் நபிக்கு எதிராக பல்லி தீ மூட்டுமா? , பல்லி இறைத்தூதருக்கு எதிராக செயல்பட்டதா? ,

  • பல்லி கெடுதல் தரும் உயிரினம் என்பதால் அதை கொல்லவேண்டும் என்ற கருத்தில் சரியான ஹதீஸ்கள் உள்ளன. அதை ஏற்றுக்கொள்வது எந்த குர்ஆன் வசனங்களுக்கோ, இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளுக்கோ எதிரானதாக ஆகாது. (பார்க்க: புகாரி-3306 )

2 . இந்தக் கருத்தில் உம்மு ஷரீக் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-8395 , முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹ்-2210 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-19891 , அஹ்மத்-27365 , 27619 , தாரிமீ-2043 , புகாரி-3307 , 3359 , முஸ்லிம்-4505 , 4506 , இப்னு மாஜா-3228 , நஸாயீ-2885 , குப்ரா நஸாயீ-3854 , இப்னு ஹிப்பான்-5634 , அல்முஃஜமுல் கபீர்-250 , 251 , குப்ரா பைஹகீ-10049 , 19367 ,

மேலும் பார்க்க: புகாரி-3306 .

2 comments on Bukhari-3359

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.