தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3481

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

 நபி(ஸல்) அவர்கள் கூறினார்

(முன் காலத்தில்) ஒருவர், வரம்பு மீறி (தீய செயல் புரிந்து) வந்தார். அவருக்கு மரணம் வந்தபோது தன் மகன்களை அழைத்து, ‘நான் இறந்துவிட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு, என்னைப் பொடிப் பொடியாக்கி பின்னர் காற்றில் தூவி விடுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வளவும் செய்த பிறகும்) அல்லாஹ் என்னை உயிராக்க முடிந்தால் எவரையும் வேதனைப்படுத்தாத அளவிற்கு ஒரு வேதனையை (தண்டனையாக) எனக்கு அவன் அளிப்பான்’ என்று கூறினார்.

அவர் இறந்துவிட்டபோது அவ்வாறே அவரைச் செய்துவிட்டார்கள். உடனே அல்லாஹ், பூமியை நோக்கி, ‘அவரி(ன் உடல் அணுக்களி)லிருந்து உன்னில் இருப்பவற்றை ஒன்று சேர்’ என்று கட்டளையிட்டான். அவ்வாறே பூமி செய்தது. அவர் (அல்லாஹ்வின் முன்னிலையில் முழு உருப்பெற்று) நின்றபோது அல்லாஹ், நீ இப்படிச் செய்யும் படி உன்னைத் தூண்டியது எது?’ என்று கேட்டான். அவர், ‘என் இறைவா! உன் அச்சம் தான் இப்படிச் செய்யும்படி என்னைத் தூண்டியது’ என்று பதிலளித்தார். எனவே, அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளித்தான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60

(புகாரி: 3481)

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

كَانَ رَجُلٌ يُسْرِفُ عَلَى نَفْسِهِ فَلَمَّا حَضَرَهُ المَوْتُ قَالَ لِبَنِيهِ: إِذَا أَنَا مُتُّ فَأَحْرِقُونِي، ثُمَّ اطْحَنُونِي، ثُمَّ ذَرُّونِي فِي الرِّيحِ، فَوَاللَّهِ لَئِنْ قَدَرَ عَلَيَّ رَبِّي لَيُعَذِّبَنِّي عَذَابًا مَا عَذَّبَهُ أَحَدًا، فَلَمَّا مَاتَ فُعِلَ بِهِ ذَلِكَ، فَأَمَرَ اللَّهُ الأَرْضَ فَقَالَ: اجْمَعِي مَا فِيكِ مِنْهُ، فَفَعَلَتْ، فَإِذَا هُوَ قَائِمٌ، فَقَالَ: مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ؟ قَالَ: يَا رَبِّ خَشْيَتُكَ، فَغَفَرَ لَهُ ” وَقَالَ غَيْرُهُ: «مَخَافَتُكَ يَا رَبِّ»


Bukhari-Tamil-3481.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3481.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




(இந்த செய்தி ஏற்கத்தக்க செய்தி அல்ல. இஸ்லாமிய அடிப்படைக்கு முரணான செய்தியாகும். எரித்துவிட்டால், இறைவனால் தண்டனை தர முடியாது என்ற நம்பிக்கை இறைவனின் வல்லமையை மறுப்பதாகும். மேலும் இது எல்லோராலும் செயல்படுத்த முடியாத செய்தியாகும்.

மேலும் புகாரியின் 4974 செய்திக்கு மாற்றமாக உள்ளது)

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-, அஹ்மத்-, புகாரி-3481 , 7506 , முஸ்லிம்-53175318 , இப்னு மாஜா-, நஸாயீ-,

2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-3478 .

3 . ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-3452 .

4 . அபூமஸ்வூத்

5 . ஸல்மான்

6 . முஆவியா பின் ஹைதா

7 . இப்னு மஸ்வூத்

8 . உக்பா பின் ஆமிர்

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்…

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-2077 .

3 comments on Bukhari-3481

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,
    புகாரீ – 3481 என்ற ஹதீஸுடன் இது பொருந்தி போகிறது. ஆகவே இது முற்காலத்தில் வாழ்ந்த பனூ இஸ்ராயீல்களுக்கு உண்டான விதி விலக்கான சட்டம் என்று புரிந்துகொண்டால் முரண் வராது.

    1. வஅலைக்கும் ஸலாம். மேலதிக விளக்கமோ, ஹதீஸ் சான்றுகளோ இருந்தால் பகிரவும்.

  2. அஸ்ஸலாமு அலைக்கும்… இன்ஷா அல்லாஹ் எனக்கு தெரிந்ததை பகிர்கிறேன் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்.

    பொதுவாக ஒரு சட்டம் எந்த சமுதாயத்தின் மத்தியில் இறங்குகிறதோ அது அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். உ-தா: கொழுப்பு தடுக்கப்பட்டது,சனிக்கிழமை மீன் பிடிக்க தடை இதை நாம் இப்போது உள்ளதாக எடுத்துக்கொள்ளமாட்டோம். அதே போல் தான் அல்லாஹ் முந்தைய சமுதாயத்தில் இப்படியும் மன்னிப்பை வழங்கியுள்ளான் என்பதை புரிந்துகொள்ளலாம். அது நமக்கு பொருந்தாது.

    ஆதாரம்:

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    (முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது, இஸ்ரவேலர் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக் குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.

    புகாரீ 3467

    இந்த ஹதீஸின் படி விபச்சாரம் செய்த பெண்ணுக்கு நீ போய் நாய்க்கு தண்ணீர் கொடுத்துவிட்டு வா அல்லாஹ் உன்ன மன்னிச்சிடுவான் உனக்கு கல்லெறி தண்டனை கிடையாது என்று நபி அவர்கள் சொல்லவில்லை. அதற்குறிய தண்டனையை தான் நபியவர்கள் கொடுத்தார்கள்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.