தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4681

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

இதோ! அவர்கள் (தம் தீய எண்ணங்களை) அல்லாஹ்விடமிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள். தெரிந்து கொள்ளுங்கள்: இவர்கள் ஆடை களால் தங்களை மூடி மறைத்துக் கொண்ட போதிலும் அவர்கள் மறைக்கின்றவற்றையும், அவர்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும் அல்லாஹ் நன்கறிகின்றான். திண்ணமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் (எனும்11:5ஆவது இறை வசனம்).

(11:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹாக்க எனும் சொல்லுக்கு இறங்கியது என்று பொருள். (அதன் எதிர்கால வினைச் சொல்லான) யஹீக்கு என்பதற்கு இறங்கும் என்று பொருள். (11:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யஊஸுன் (நம்பிக்கையிழந்தவன்) எனும் சொல் யஇஸ்த்து (நம்பிக்கையிழந்தேன்) என்பதிலிருந்து பஃஊல் எனும் வாய்பாட்டில் வந்ததாகும்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (11:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தப்தயிஸ் எனும் சொல்லுக்குக் கவலைப்படுதல் என்று பொருள். (11:5ஆவது வசனத்திலுள்ள) அவனிடமிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள் என்பதன் கருத்தாவது: முடிந்தால் அல்லாஹ்விடமிருந்து மறைத்து விடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் சத்தியத்தில் சந்தேகம்கொள்கிறார்கள்.

 முஹம்மத் இப்னு அப்பாத் இப்னி ஜஅஃபர்(ரஹ்) அறிவித்தார்.

இப்னு அப்பாஸ் (ரலி) இந்த (திருக்குர்ஆன் 11:5 வது) வசனத்தை ‘அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும்’ என ஓத கேட்டேன். அவர்களிடம் அது குறித்து நான் (விளக்கம்) கேட்டதற்கு அவர்கள் ‘மக்கள் சிலர், இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்று (ஆடையை நீக்கிடத் தம் பிறவு உறுப்பு) வானத்திற்குத் தெரியும்படி உட்காருவதையும், இவ்வாறே தம் மனைவிமார்களுடன் உறவு கொள்ளும்போது (தம் ஆடையை நீக்கிப் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரிந்து விடுவதையும் எண்ணி வெட்கப்பட்டு (அதை மறைக்க முயன்று தலைகுனிந்து) கொள்வார்கள். அவர்களைக் குறித்தே இந்த வசனம் அருளப்பட்டது’ என்று கூறினார்கள்.

Book : 65

(புகாரி: 4681)

سُورَةُ هُودٍ

وَقَالَ أَبُو مَيْسَرَةَ: ” الأَوَّاهُ: الرَّحِيمُ بِالحَبَشِيَّةِ ” وَقَالَ ابْنُ عَبَّاسٍ: (بَادِئَ الرَّأْيِ): «مَا ظَهَرَ لَنَا» وَقَالَ مُجَاهِدٌ: {الجُودِيُّ} [هود: 44]: «جَبَلٌ بِالْجَزِيرَةِ» وَقَالَ الحَسَنُ: {إِنَّكَ لَأَنْتَ الحَلِيمُ} [هود: 87]: «يَسْتَهْزِئُونَ بِهِ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {أَقْلِعِي} [هود: 44]: «أَمْسِكِي»، {عَصِيبٌ} [هود: 77]
[ص:73]: «شَدِيدٌ». {لاَ جَرَمَ} [هود: 22]: «بَلَى». {وَفَارَ التَّنُّورُ} [هود: 40]: «نَبَعَ المَاءُ» وَقَالَ عِكْرِمَةُ: «وَجْهُ الأَرْضِ» {أَلاَ إِنَّهُمْ يَثْنُونَ صُدُورَهُمْ لِيَسْتَخْفُوا مِنْهُ أَلاَ حِينَ يَسْتَغْشُونَ ثِيَابَهُمْ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ} [هود: 5] وَقَالَ غَيْرُهُ: {وَحَاقَ} [هود: 8]: «نَزَلَ». {يَحِيقُ} [فاطر: 43]: «يَنْزِلُ». {يَئُوسٌ}: «فَعُولٌ مِنْ يَئِسْتُ» وَقَالَ مُجَاهِدٌ: {تَبْتَئِسْ} [هود: 36]: «تَحْزَنْ». {يَثْنُونَ صُدُورَهُمْ} [هود: 5]: «شَكٌّ وَامْتِرَاءٌ فِي الحَقِّ». {لِيَسْتَخْفُوا مِنْهُ} [هود: 5]: «مِنَ اللَّهِ إِنِ اسْتَطَاعُوا»

حَدَّثَنَا الحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ صَبَّاحٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبَّادِ بْنِ جَعْفَرٍ

أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقْرَأُ: «أَلاَ إِنَّهُمْ تَثْنَوْنِي صُدُورُهُمْ» قَالَ: سَأَلْتُهُ عَنْهَا. فَقَالَ: «أُنَاسٌ كَانُوا يَسْتَحْيُونَ أَنْ يَتَخَلَّوْا فَيُفْضُوا إِلَى السَّمَاءِ، وَأَنْ يُجَامِعُوا نِسَاءَهُمْ فَيُفْضُوا إِلَى السَّمَاءِ فَنَزَلَ ذَلِكَ فِيهِمْ»


Bukhari-Tamil-4681.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4681.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.