தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4797

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும், நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்தும், சலாமும் சொல்லுங்கள் எனும் (33:56ஆவது) இறை வசனம். அபுல் ஆ-யா பின் மிஹ்ரான் அர்ரியாஹீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நபியின் மீது அல்லாஹ் ஸலவாத் கூறுவதன் பொருளாவது, வானவர்களிடம் அவன் நபியைப் புகழ்ந்து பேசுகின்றான் என்பதாகும். வானவர்களின் ஸலவாத் என்பது (நபிக்காக அவர்கள் இறைவனிடம்) வேண்டுவதாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) யுஸல்லூன எனும் சொல்லுக்கு நபியின் சுபிட்சத்திற்காகப் பிரார்த்திக்கிறார்கள் என்று பொருள். (33:60ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ல நுஃக்ரியன்னக்க எனும் சொல்லுக்கு நாம் உம்மை ஏவி விடுவோம் என்று பொருள். 4797 கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது சலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம்.18 (தங்கள் மீது) ஸலவாத் கூறுவது எப்படி? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்,அல்லாஹும்ம ஸல்- அலா முஹம்மதின், வ அலா ஆ- முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆ- இப்ராஹீம, இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆ- முஹம்மதின், கமா பாரக்த்த அலா ஆ- இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள்! என பதிலளித்தார்கள்.19

 கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களின் மீது ‘சலாம்’ கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். (தங்களின் மீது) ‘ஸலவாத்’ கூறுவது எப்படி?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம, இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்’ என்று சொல்லுங்கள்!’ என பதிலளித்தார்கள்.

Book : 65

(புகாரி: 4797)

إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا} [الأحزاب: 56] قَالَ أَبُو العَالِيَةِ: ” صَلاَةُ اللَّهِ: ثَنَاؤُهُ عَلَيْهِ عِنْدَ المَلاَئِكَةِ، وَصَلاَةُ المَلاَئِكَةِ الدُّعَاءُ ” قَالَ ابْنُ عَبَّاسٍ: ” يُصَلُّونَ: يُبَرِّكُونَ {لَنُغْرِيَنَّكَ} [الأحزاب: 60]: لَنُسَلِّطَنَّكَ

حَدَّثَنِي سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنِ الحَكَمِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ

قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَمَّا السَّلاَمُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ، فَكَيْفَ الصَّلاَةُ عَلَيْكَ؟ قَالَ: ” قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.