தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4884

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

நீங்கள் சில பேரீச்சமரங்களை வெட்டியது… எனும் (59:5ஆவது) வசனத் தொடர். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) லீனத் எனும் சொல் அஜ்வா (எனும் அடர்த்தியான பேரீச்ச மரம்) மற்றும் பர்ணீ (எனும் சிவப்பு-மஞ்சள் நிற பேரீச்ச மரம்) அல்லாத (ம-வான) பேரீச்ச மரத்தைக் குறிக்கும்.

 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘புவைரா’ எனுமிடத்திலிருந்து ‘பனூ நளீர்’ குலத்தாருடைய சில பேரிச்ச மரங்களை (அவர்களின் தேசத் துரோகக் கொடுஞ் செயல்களுக்காக) எரித்தார்கள். இன்னும், (சிலவற்றை) வெட்டினார்கள். அப்போது அல்லாஹ், ‘நீங்கள் சில பேரிச்ச மரங்களை வெட்டியதோ, அவற்றின் அடி மரங்களின் மீது அவற்றை நிற்கும்படிவிட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்)’ எனும் (திருக்குர்ஆன் 59:5 வது) வசனத்தை அருளினான்.

Book : 65

(புகாரி: 4884)

بَابُ قَوْلِهِ: {مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ} [الحشر: 5]
«نَخْلَةٍ مَا لَمْ تَكُنْ عَجْوَةً أَوْ بَرْنِيَّةً»

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرَّقَ نَخْلَ بَنِي النَّضِيرِ وَقَطَعَ وَهِيَ البُوَيْرَةُ»، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا فَبِإِذْنِ اللَّهِ وَلِيُخْزِيَ الفَاسِقِينَ} [الحشر: 5]


Bukhari-Tamil-4884.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4884.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.