தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4919

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 2

காலின் திரை அகற்றப்ப(ட்)டு (இறைவன் காட்சியளிக்கு)ம் அந்த (மறுமை) நாளில் (மக்களெல்லாரும் தாமாகவே) சிரவணக்கம் செய்ய நிர்ப்பந்திக்கப்படும்போதுகூட (இறைமறுப்பாளர்களான) இவர்கள் (அதற்குச்) சக்தி பெறமாட்டார்கள் (எனும் 68:42ஆவது இறை வசனம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்.

முகஸ்துதிக்காகவும் மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்துவந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (வளையாமல்) ஒரே கட்டையைப்போல் மாறிவிடும்.

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 65

(புகாரி: 4919)

بَابُ {يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ} [القلم: 42]

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

«يَكْشِفُ رَبُّنَا عَنْ سَاقِهِ، فَيَسْجُدُ لَهُ كُلُّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ، فَيَبْقَى كُلُّ مَنْ كَانَ يَسْجُدُ فِي الدُّنْيَا رِيَاءً وَسُمْعَةً، فَيَذْهَبُ لِيَسْجُدَ، فَيَعُودُ ظَهْرُهُ طَبَقًا وَاحِدًا»


Bukhari-Tamil-4919.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4919.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




மேலும் பார்க்க: முஸ்லிம்-302 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.