தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4920

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 69.

‘அல்ஹாக்கா’ அத்தியாயம்.

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…)

(69:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஈஷத்துர் ராளியா’ (திருப்தியான வாழ்க்கை) என்பதன் கருத்தாவது: அந்த வாழ்க்கையில் அவர் திருப்தியைக் காண்பார்.

(69:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்காளியா’ (முடிந்துபோனதாக) எனும் சொல், மறுமையில் எழுப்பப்படுவதற்குமுன் ஏற்படும் மரணத்தைக் குறிக்கும். (அந்த மரணத்தோடு எல்லாம் முடிந்திருக்கக்கூடாதா எனப் புலம்புவான்.) (69:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஹத்’ (எவரும்) எனும் சொல் ஒருமை, பன்மை ஆகிய இரண்டு நிலையிலும் பிரயோகிக்கப்படுகிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (69:46ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வத்தீன்’ எனும் சொல்லுக்கு ‘நாடி நரம்பு’ என்பது பொருள். (69:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஃகா’ எனும் சொல்லுக்கு ‘அதிகமானது’என்று பொருள். (69:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தாஃகியா’ எனும் சொல்லுக்கு ‘(எல்லை மீறிய) அட்டூழியம்’ என்று பொருள். (‘தாஃகியா’ என்பதற்கு ‘புயல்’ என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.) அந்தப் புயல் வானவர்களால்கூடக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிகக் கடுமையாக வீசியது.

இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தார்மீது பெருவெள்ளம் மிகக் கடுமையாகப் பாய்ந்ததுபோல் இந்த (‘ஸமூத்’ மற்றும் ‘ஆத்’ சமூகத்தினருக்கும்) வேதனை எற்பட்டது.

பாடம்: 70. ‘அல்மஆரிஜ்’ அத்தியாயம்.

(70:13 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஸீலத்திஹி’ (அவனுடைய நெருங்கிய உறவினர்) எனும் சொல், ஒரு மனிதனின் குடும்ப உறவு எந்தத் தந்தை மற்றும் பாட்டனார் மூலம் வந்து சேர்கிறதோ அத்தகைய நெருக்கமான மூதாதையரைக் குறிக்கும்.

(70:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லிஷ்ஷவா’ எனும் சொல், இரண்டு கைகள், இரண்டு கால்கள், மற்றும் உடலின் அனைத்து பாகங்களையும், தலையின் சருமத்தையும் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது. எந்த உறுப்பைத் துண்டிப்பதால் மனிதன் இறந்துவிடமாட்டானோ அதுவும் ‘ஷவா’ என்று சொல்லப்படுகிறது.

(70:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஸீன்’ எனும் சொல்லுக்கு, ‘கூட்டம் கூட்டமாக’ என்பது பொருள். ‘இஸத்’ (கூட்டம்) என்பது அதன் ஒருமையாகும்.

பாடம்: 71. ‘நூஹ்’ அத்தியாயம்.

(71:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்வார்’ எனும் சொல்லுக்கு ‘மாறுபட்ட பல்வேறு நிலைகள்’ என்பது பொருள். (இதன் ஒருமையான ‘தவ்ர்’ எனும் சொல்லுக்கு ‘அளவு’, ‘வரம்பு’ எனப் பொருள் கூறப்படுவதுண்டு. இதன்படி) ‘அதா தவ்ரஹு’ எனும் வாக்கியத்திற்குத் ‘தனது வரம்பை அவன் மீறிவிட்டான்’ என்று பொருள் கொள்ளப்படுகிறது.

(71:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குப்பார்’ எனும் சொல்லுக்கு ‘மிகப் பெரியது’ என்று பொருள். ‘குபார்’ (பெரிய) என்பதைவிட, ‘குப்பார்’ (மிகப் பெரிய) எனும் சொல், மிகைச் சொல்லாகும். இதைப் போன்றே ‘ஜுமால்’ (அழகிய) என்பதைவிட ‘ஜும்மால்’ (மிக அழகிய) என்பது மிகைச் சொல்லாகும். ‘குபார்’ என்பதற்கு ‘கபீர்’ (பெரியவன்) என்றும் பொருளுண்டு. ‘குபார்’ என்று (அழுத்தல் குறியின்றியு)ம் ஓதப்பட்டுள்ளது.

‘அழகிய மனிதன்’ என்பதைச் சுட்ட அரபியர், ‘ரஜுலுன் ஹுஸ்ஸானுன்’, ‘ரஜுலுன் ஜும்மாலுன்’, (என அழுத்தல் குறியுடனும்) ‘ரஜுலுன் ஹுஸானுன்’, ‘ரஜுலுன் ஜுமாலுன்’ என (அழுத்தல் குறியின்றியும்) குறிப்பிடுகின்றனர்.

(71:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தய்யார்’ எனும் சொல், ‘தவ்ர்’ எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். (‘தவ்ர்’ என்பதற்கு ‘குடியிருப்பு’ என்று பொருள்) ‘தய்யார்’ எனும் பதத்தின் வாய்ப்பாடு, ‘ஃபஹ்ஹால்’ எனும் வாய்பாட்டில் அமைந்துள்ளது. ‘அல்கய்யூம்’ என்பதை ‘அல்கய்யாம்’ என்றே உமர் (ரலி) அவர்கள் ஓதியுள்ளார்கள். (அதைப் போன்றே இதுவும் அமைந்துள்ளது.) மற்றவர்கள் கூறுகிறார்கள்: ‘தய்யார்’ எனும் சொல்லுக்கு ‘எவரையும்’ என்று பொருள். (71:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தபார்’ எனும் சொல்லுக்கு ‘அழிவு’ என்பது பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (71:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மித்ரார்’ எனும் சொல்லுக்கு ‘தொடர்ந்து பெய்யும் மழை’ என்று பொருள். (71:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வகார்’ எனும் சொல்லுக்கு ‘மாண்பு’ என்பது பொருள்.

பாடம்: 1

(உங்கள் தெய்வங்களாகிய) வத்து, சுவாஉ, யஃகூஸ், யஊக் மற்றும் நஸ்ர் ஆகியவற்றை(க் கேட்பாரற்று) விட்டுவிடாதீர்கள் என்று அவர்கள் சொல்லிக்கொண்டனர் (எனும் 71:23ஆவது இறைவசனம்)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களின் (காலத்து) மக்களிடையே (வழிபாடு செய்யப்பட்டுக்கொண்டு) இருந்த சிலைகள், பின்பு அரபியரிடையே இருந்தன. ‘வத்து’ என்பது, ‘தூமத்துல் ஜந்தல்’ எனும் இடத்திலிருந்த ‘கல்ப்’ குலத்தாரின் சிலையாகும். ‘சுவாஉ’ என்பது ‘பனூ ஹுஃதைல்’ குலத்தாரின் சிலையாகும்.

‘யஃகூஸ்’ என்பது ‘பனூ முராத்’ குலத்தாரின் சிலையாக இருந்தது. பின்னர், ‘சபஉ’ சமுதாயத்தாருக்கு அருகில் (யமனிலுள்ள) ‘ஜவ்ஃப்’ எனுமிடத்தில் வசித்துவந்த ‘பனூ ஃகுதைஃப்’ குலத்தாருக்குச் சொந்தமானது. ‘யஊக்’ என்பது ‘பனூ ஹம்தான்’ குலத்தாரின் சிலையாகும். ‘நஸ்ர்’ என்பது (யமனின் பழங்குடியரான) ‘ஹிம்யர்’ மக்களின் சிலையாகும். இவர்கள் ‘துல்கிலாஉ’ என்பவருடைய சந்ததியினராவர்.

(தெய்வச் சிலைகளாகக் கற்பிக்கப்பட்ட) இவை (ஐந்தும்) நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஐந்து நல்ல மனிதர்களின் பெயர்களேயாகும். பின்னர் இவர்கள் மரணமடைந்தபொழுது இவர்களுடைய மக்களின் மனத்தில் ஷைத்தான், ‘‘அ(ந்த நல்ல)வர்கள் அமர்ந்துவந்த அவைகளில் சிலைகளை நிறுவுங்கள். (அவர்களின் நினைவாக) அவற்றுக்கு அவர்களின் பெயர்களையே சூட்டுங்கள்!” என்று எண்ணச் செய்தான்.

(அதன்படியே) அவர்களும் செய்தனர். அப்போது அந்தச் சிலைகள் வழிபாடு செய்யப்படவில்லை. ஆனால், (தங்களின் பெரியவர்களை நினைவுகூர்வதற்காகச் சிலை நிறுவிய) அந்த மக்களும் இறந்து, (அந்தச் சிலைகள் நிறுவப்பட்டதற்கான காரணம் குறித்த) அறிவும் மங்கிவிட்டபோது அச்சிலைகள் வழிபாடு செய்யப்படத் தொடங்கின.

அத்தியாயம் :

(புகாரி: 4920)

سُورَةُ الحَاقَّةِ
قَالَ ابْنُ جُبَيْرٍ: {عِيشَةٍ رَاضِيَةٍ} [الحاقة: 21]: «يُرِيدُ فِيهَا الرِّضَا»، {القَاضِيَةَ} [الحاقة: 27]: «المَوْتَةَ الأُولَى الَّتِي مُتُّهَا لَمْ أُحْيَ بَعْدَهَا»، {مِنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ} [الحاقة: 47]: «أَحَدٌ يَكُونُ لِلْجَمْعِ وَلِلْوَاحِدِ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {الوَتِينَ} [الحاقة: 46]: «نِيَاطُ القَلْبِ» قَالَ ابْنُ عَبَّاسٍ: {طَغَى} [طه: 24]: ” كَثُرَ، وَيُقَالُ: {بِالطَّاغِيَةِ} [الحاقة: 5]: بِطُغْيَانِهِمْ، وَيُقَالُ: طَغَتْ عَلَى الخَزَّانِ كَمَا طَغَى المَاءُ عَلَى قَوْمِ نُوحٍ
سُورَةُ {سَأَلَ سَائِلٌ} [المعارج: 1] ”
الفَصِيلَةُ: أَصْغَرُ آبَائِهِ القُرْبَى، إِلَيْهِ يَنْتَمِي مَنِ انْتَمَى، {لِلشَّوَى} [المعارج: 16]: اليَدَانِ وَالرِّجْلاَنِ وَالأَطْرَافُ، وَجِلْدَةُ الرَّأْسِ يُقَالُ لَهَا شَوَاةٌ، وَمَا كَانَ غَيْرَ مَقْتَلٍ فَهُوَ شَوًى، عِزِينَ وَالعِزُونَ: الحِلَقُ وَالجَمَاعَاتُ، وَوَاحِدُهَا عِزَةٌ ”
سُورَةُ نُوحٍ: {إِنَّا أَرْسَلْنَا} [هود: 70]
{أَطْوَارًا} [نوح: 14]: ” طَوْرًا كَذَا وَطَوْرًا كَذَا، يُقَالُ: عَدَا طَوْرَهُ أَيْ قَدْرَهُ، وَالكُبَّارُ أَشَدُّ مِنَ الكِبَارِ، وَكَذَلِكَ جُمَّالٌ وَجَمِيلٌ لِأَنَّهَا أَشَدُّ مُبَالَغَةً، وَكُبَّارٌ الكَبِيرُ، وَكُبَارًا أَيْضًا بِالتَّخْفِيفِ، وَالعَرَبُ تَقُولُ: رَجُلٌ حُسَّانٌ وَجُمَّالٌ وَحُسَانٌ، مُخَفَّفٌ، وَجُمَالٌ، مُخَفَّفٌ {دَيَّارًا} [نوح: 26]: مِنْ دَوْرٍ، وَلَكِنَّهُ فَيْعَالٌ مِنَ الدَّوَرَانِ ” كَمَا قَرَأَ عُمَرُ: ” الحَيُّ القَيَّامُ: وَهِيَ مِنْ قُمْتُ ” وَقَالَ غَيْرُهُ: {دَيَّارًا} [نوح: 26]: «أَحَدًا»، {تَبَارًا} [نوح: 28]: «هَلاَكًا» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {مِدْرَارًا} [الأنعام: 6]: «يَتْبَعُ بَعْضُهَا بَعْضًا»، {وَقَارًا} [نوح: 13]: «عَظَمَةً»
بَابُ {وَدًّا وَلاَ سُواعًا، وَلاَ يَغُوثَ وَيَعُوقَ} [نوح: 23]

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَقَالَ عَطَاءٌ: عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا،

«صَارَتِ الأَوْثَانُ الَّتِي كَانَتْ فِي قَوْمِ نُوحٍ فِي العَرَبِ بَعْدُ أَمَّا وَدٌّ كَانَتْ لِكَلْبٍ بِدَوْمَةِ الجَنْدَلِ، وَأَمَّا سُوَاعٌ كَانَتْ لِهُذَيْلٍ، وَأَمَّا يَغُوثُ فَكَانَتْ لِمُرَادٍ، ثُمَّ لِبَنِي غُطَيْفٍ بِالْجَوْفِ، عِنْدَ سَبَإٍ، وَأَمَّا يَعُوقُ فَكَانَتْ لِهَمْدَانَ، وَأَمَّا نَسْرٌ فَكَانَتْ لِحِمْيَرَ لِآلِ ذِي الكَلاَعِ، أَسْمَاءُ رِجَالٍ صَالِحِينَ مِنْ قَوْمِ نُوحٍ، فَلَمَّا هَلَكُوا أَوْحَى الشَّيْطَانُ إِلَى قَوْمِهِمْ، أَنِ انْصِبُوا إِلَى مَجَالِسِهِمُ الَّتِي كَانُوا يَجْلِسُونَ أَنْصَابًا وَسَمُّوهَا بِأَسْمَائِهِمْ، فَفَعَلُوا، فَلَمْ تُعْبَدْ، حَتَّى إِذَا هَلَكَ أُولَئِكَ وَتَنَسَّخَ العِلْمُ عُبِدَتْ»


Bukhari-Tamil-4920.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4920.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.