தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5027

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21

குர்ஆனைத் தாமும் கற்று அதனைப் பிறருக்கும் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.

இதை உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து அபூ அப்திர் ரஹ்மான் வழியாக ஸஅத் இப்னு உபைதா (ரஹ்) அறிவித்தார்.

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அபூ அப்திர்ரஹ்மான் (ரஹ்) (மக்களுக்கு) குர்ஆனைக் கற்றுக் கொடுத்து வந்தார்கள். ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் (இராக்கின் ஆட்சியாளராக) ஆகும் வரையில் இது தொடர்ந்தது. அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள், ‘(குர்ஆனின் சிறப்பு குறித்துக் கூறப்பட்ட) இந்த நபிமொழியே என்னை (மக்களுக்குக் கற்றுத்தரும்) இந்த இடத்தில் உட்காரவைத்தது’ என்று கூறினார்கள்.

Book : 66

(புகாரி: 5027)

بَابٌ: خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ القُرْآنَ وَعَلَّمَهُ

حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَلْقَمَةُ بْنُ مَرْثَدٍ، سَمِعْتُ سَعْدَ بْنَ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ القُرْآنَ وَعَلَّمَهُ»،

قَالَ: وَأَقْرَأَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ فِي إِمْرَةِ عُثْمَانَ، حَتَّى كَانَ الحَجَّاجُ قَالَ: وَذَاكَ الَّذِي أَقْعَدَنِي مَقْعَدِي هَذَا


Bukhari-Tamil-5027.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-5027.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-4664.




இந்தக் கருத்தில் உஸ்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-405 , 412 , 413 , 500 , தாரிமீ-3381 , புகாரி-5027 , 5028 , இப்னு மாஜா-211212 , அபூதாவூத்-1452  , திர்மிதீ-2907 , 2908 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.