தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5738

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 35

கண்ணேறுக்கு ஓதிப்பார்ப்பது70

 ஆயிஷா (ரலி) கூறினார்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீயவிளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி ‘கட்டளையிட்டார்கள்.

Book : 76

(புகாரி: 5738)

بَابُ رُقْيَةِ العَيْنِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي مَعْبَدُ بْنُ خَالِدٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ شَدَّادٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ

«أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ أَمَرَ أَنْ يُسْتَرْقَى مِنَ العَيْنِ»


Bukhari-Tamil-5738.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-5738.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




3 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-24345 , 24442 , 25068 , புகாரி-5738 , 5741 , முஸ்லிம்-4415 , 4416 , 4418 , 4419 , இப்னு மாஜா-3512 , …

மேலும் பார்க்க: புகாரி-5740 .

7 comments on Bukhari-5738

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு… கண்ணேறு தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் பலவீணமானதாக இருந்தால் அதனை கட்டாயம் நிராகரிக்க வேண்டும். ஆனால் அவைகள் பலமான ஹதீஸாக இருந்தால் எப்படி நாம் ஹதீஸை மறுக்க இயலும்? குர்ஆன் & ஹதீஸை தான் நாம் பின்பற்ற வேண்டும். இவை இரண்டும் பாதிப்பு ஏற்படா வகையில் கண்ணேறு அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் ஏற்படும் என்று புரிந்துக்கொள்ளலாமே.
    இது என்னுடைய புரிதல்.‌ அல்லாஹ்் நமக்கு மேலும் கல்வியை அதிகரிப்பானாக! இன்னும் நேரான வழியில் நம்மை சேர்பானாக!

    1. புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் கண்ணேறு பற்றிய செய்திகள் பதிவு செய்யப்பட்டிருப்பதினால் குறித்த செய்திகள் உண்மையானவை தாம் என்ற நம்பிக்கையின் காரணமாகத் தான் பெரும்பாலானவர்கள் கண்ணேறு பற்றிய செய்திகளை நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். கண்ணேறு பற்றிய செய்திகளை நுனுக்கமாக ஆய்வு செய்து பார்த்தால் கண்ணேறு பற்றிய நம்பிக்கை நம்மை ஷிர்க்கின் பக்கம் இட்டுச் செல்கின்றது என்பது தெளிவான விஷயமாகும்.

      (கண்ணேறு, கண்ணூறு, கண்படுதல், கண் திருஷ்டி என்றும் சொல்லப்படும்)

      புனித அல்குர்ஆனின் கருத்துக்களுக்கு மாற்றமாக இருப்பதினால் சூனியம் பற்றிய செய்திகள் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் அமைந்திருப்பதைப் போல் கண் திருஷ்டி பற்றிய செய்திகளும் புனித குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக அமைந்திருப்பதினால் ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாக அமைந்திருக்கின்றது. கண் திருஷ்டி பற்றிய செய்திகளை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

      கண் திருஷ்டி உண்மை, அதனால் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்துப்பட பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. அந்த செய்திகளை மொத்தமாக பார்த்த பின் இதில் உள்ள பிரச்சினை தொடர்பாக ஆராய்வோம்.

  2. ஸஹீஹான ஹதீஸ்களை அல்குர்ஆனுக்கு முரண்படாமல் புரிந்து கொள்வது எவ்வாறு என்ற அடிப்படைகளை அறிந்து கொள்ள கீழ்வரும் கட்டுரைகளை படித்து அறிந்து கொள்ளவும் https://islamiyapuram.blogspot.com/p/blog-page_84.html

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      கண்ணியமாகவும், நாகரீகமாகவும் கேள்வி கேட்பவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் பதில் கூறுகிறோம். தங்களின் விளக்கங்களை ஆய்வு செய்கிறோம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.