தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5871

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 49

இரும்பு மோதிரம்.

 ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்:

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-)வே வந்துள்ளேன்’ என்று சொல்லிவிட்டு நீண்ட நேரம் நின்றிருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துவிட்டுக் பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள்.

அவர் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருப்பதைக் கண்ட ஒருவர் ‘(இறைத்தூதர் அவர்களே!) இவர் தங்களுக்குத் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துத் தாருங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘இவருக்கு மஹ்ராக – மணக் கொடையாகக் கொடுக்க உம்மிடம் ஏதேனும் உள்ளதா?’ என்றார். அம்மனிதர், “ஏதுமில்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘(ஏதேனும் கிடைக்குமா என்று) பார்’ என்றார்கள். அந்த மனிதர் (எங்கோ) போய்விட்டுத் திரும்பிவந்து, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை’ என்றார்.

நபி (ஸல்) அவர்கள், ‘போய்த் தேடுங்கள். இரும்பு மோதிரமாக இருந்தாலும் சரியே’ என்று சொல்ல, அந்த மனிதர் போய்விட்டுத் திரும்பி வந்து, ‘இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! ஓர் இரும்பு மோதிரம் கூடக் கிடைக்கவில்லை’ என்றார்.

அவர் கீழங்கி அணிந்திருந்தார். அவருக்கு மேல்துண்டு கூட இருக்கவில்லை. அந்த மனிதர், ‘என்னுடைய கீழங்கியை அவளுக்கு நான் மணக் கொடையாக வழங்குகிறேன்’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உம்முடைய கீழங்கியா? அதை இவள் அணிந்தால் அதிலிருந்து உம் மீது ஏதும் இருக்காது. அதை நீர் அணிந்துகொண்டால் அதிலிருந்து இவள் மீது ஏதும் இருக்காது’ என்றார்கள்.

உடனே அம்மனிதர் சற்று ஒதுங்கி அமர்ந்துகொண்டார். பிறகு அவர் திரும்பிச் செல்வதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தபோது அவரை அழைத்து வரச்சொல்ல அவரும் அழைத்து வரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது?’ என்று கேட்க, அவர் இன்னின்ன அத்தியாயங்கள் என்று சில அத்தியாயங்களை எண்ணிக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் செய்து வைத்தேன்’ என்றார்கள்.83

Book : 77

(புகாரி: 5871)

بَابُ خَاتَمِ الحَدِيدِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ سَهْلًا، يَقُولُ

جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: جِئْتُ أَهَبُ نَفْسِي، فَقَامَتْ طَوِيلًا، فَنَظَرَ وَصَوَّبَ، فَلَمَّا طَالَ مُقَامُهَا، فَقَالَ رَجُلٌ: زَوِّجْنِيهَا إِنْ لَمْ يَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ، قَالَ: «عِنْدَكَ شَيْءٌ تُصْدِقُهَا؟» قَالَ: لاَ،

قَالَ: «انْظُرْ» فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ: وَاللَّهِ إِنْ وَجَدْتُ شَيْئًا، قَالَ: «اذْهَبْ فَالْتَمِسْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ» فَذَهَبَ ثُمَّ رَجَعَ  قَالَ: لاَ وَاللَّهِ وَلاَ خَاتَمًا مِنْ حَدِيدٍ، وَعَلَيْهِ إِزَارٌ مَا عَلَيْهِ رِدَاءٌ، فَقَالَ: أُصْدِقُهَا إِزَارِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِزَارُكَ إِنْ لَبِسَتْهُ لَمْ يَكُنْ عَلَيْكَ مِنْهُ شَيْءٌ، وَإِنْ لَبِسْتَهُ لَمْ يَكُنْ عَلَيْهَا مِنْهُ شَيْءٌ» فَتَنَحَّى الرَّجُلُ فَجَلَسَ، فَرَآهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُوَلِّيًا، فَأَمَرَ بِهِ فَدُعِيَ، فَقَالَ: «مَا مَعَكَ مِنَ القُرْآنِ» قَالَ: سُورَةُ كَذَا وَكَذَا، لِسُوَرٍ عَدَّدَهَا، قَالَ: «قَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ القُرْآنِ»





மேலும் பார்க்க: புகாரி-2310 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.