தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6415

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 மறுமையுடன் ஒப்பிடுகையில் இம்மையின் நிலை.5 அல்லாஹ் கூறுகின்றான்: (மனிதர்களே!) அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண்விளையாட்டும் வேடிக்கையும் அலங் காரமும்தான். அன்றி (அது) உங்களுக்கிடை யில் வீண் பொறாமையேற்படுத்துவதாகவும், பொருட்களிலும் சந்ததிகளிலும் போட்டி யேற்படுத்துவதாகவும்தான் இருக்கிறது. (இதன் நிலையானது:) ஒரு மழையின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் (உதவியால் முளைத்த) பயிர் (நன்கு வளர்ந்து) விவசாயி களை மகிழ்வித்துக் கொண்டிருந்தது. பின்னர் அது உலர்ந்து மஞ்சள் நிறத்தில் மாறி விடுவதை நீர் காண்கின்றீர். பின்னர் அது சருகுகளாகிவிடுகின்றது. (இம்மை வாழ்வும் அவ்வாறுதான்.) மறுமையிலோ (அவர்களில் பலருக்கு) கொடிய வேதனையும் (சிலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும் திருப்பொருத்த மும் கிடைக்கின்றன. ஆகவே, இந்த (உலக) அற்ப வாழ்வு ஏமாற்றுகின்ற (அற்ப) இன்பமேயன்றி வேறில்லை. (57:20)

 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

‘சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (ம்டைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.6 காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் இறைவழியில் (போருக்குச்) செல்வது உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்’7 என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.

Book : 81

(புகாரி: 6415)

بَابُ مَثَلِ الدُّنْيَا فِي الآخِرَةِ

وَقَوْلِهِ تَعَالَى: {أَنَّمَا الحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ، وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ، وَتَكَاثُرٌ فِي الأَمْوَالِ وَالأَوْلاَدِ، كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الكُفَّارَ نَبَاتُهُ، ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا، ثُمَّ يَكُونُ حُطَامًا، وَفِي الآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ، وَمَغْفِرَةٌ مِنَ اللَّهِ وَرِضْوَانٌ، وَمَا الحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الغُرُورِ} [الحديد: 20]

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

«مَوْضِعُ سَوْطٍ فِي الجَنَّةِ، خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَغَدْوَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ، خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.