தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6880

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8

கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்கு (இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய) இரண்டு யோசனைகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.

 அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

அறியாமைக் காலத்தில் தங்கள் குலத்தாரில் ஒருவரைக் கொலை செய்ததற்கு பதிலாக மக்கா வெற்றி ஆண்டில் ‘பனூலைஸ்’ குலத்தாரில் ஒருவரை குஸாஆ குலத்தார் கொலை செய்தனர். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து (உரையாற்றுகையில் பின்வருமாறு) கூறினார்கள்:

இந்த(ப் புனித) மக்கா நகரைவிட்டு யானைப் படையை அல்லாஹ் தடுத்து நிறுத்தினான். மேலும், மக்காவாசிகளின் மீது அல்லாஹ் தன் தூதருக்கும் நம்பிக்கையாளருக்கும் ஆதிக்கம் அளித்தான். எச்சரிக்கை! மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை. எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதில்லை. நினைவில் கொள்க! எனக்குக் கூட பகலில் சிறிது நேரம் யுத்தம் புரியவே அனுமதிக்கப்பட்டிருந்தது.

எச்சரிக்கை! சந்தேகத்திம்டமின்றி (இங்கு) போரிடுதல் இந்த நிமிடத்திலிருந்து (முற்றாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்நகரின் முட்செடி பிடுங்கப்படக்கூடாது. இதன் மரம் வெட்டப்படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி) மக்களுக்கு அறிவிப்புச் செய்பவரைத் தவிர (பொருளுக்கு உரிமையற்றவர் யாரும்) எடுக்கக் கூடாது. ஒருவர் கொலை செய்யப்பட்டால் அவரின் உறவினர்கள் இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய இரண்டு யோசனைகளில் சிறந்ததை அவர்கள் தேர்வு செய்யலாம்’ என்று கூறினார்கள்.

அப்போது யமன்வாசிகளில் ‘அபூ ஷாஹ்’ என்றழைக்கப்பட்ட ஒருவர் எழுந்து, இறைத்தூதர் அவர்களே! (இந்த உரையை) எனக்கு எழுதித் தரச்சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இவருக்கு (என் உரையை) எழுதிக்கொடுங்கள்’ என்றார்கள். அப்போது குறைஷியரில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (மக்காவின் செடிகொடிகளை வெட்டக்கூடாது என்பதிலிருந்து வாசனைத் தாவரமானது) ‘இத்கிர்’ புல்லிற்கு விலக்கு அளியுங்கள். ஏனென்றால், நாங்கள் அதை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் மண்ணறைகளிலும் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்’ என்றார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘இத்கிர் புல்லைத் தவிர!’ என்றார்கள். 17

அபூ நுஐம் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘யானைப்படை என்பதற்கு பதிலாக, ‘கொலை செய்வதை’ என்று இடம் பெற்றுள்ளது எனச் சிலர் அறிவித்துள்ளனர்.

உபைதுல்லாஹ் இப்னு மூஸா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘கொலையுண்டவரின் குடும்பத்தார் (சார்பாக) பழிவாங்கல்’ என்று இடம் பெற்றுள்ளது.

Book : 87

(புகாரி: 6880)

بَابُ مَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ:

«أَنَّ خُزَاعَةَ قَتَلُوا رَجُلًا» وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا حَرْبٌ، عَنْ يَحْيَى، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ: أَنَّهُ عَامَ فَتْحِ مَكَّةَ، قَتَلَتْ خُزَاعَةُ رَجُلًا مِنْ بَنِي لَيْثٍ، بِقَتِيلٍ لَهُمْ فِي الجَاهِلِيَّةِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” إِنَّ اللَّهَ حَبَسَ عَنْ مَكَّةَ الفِيلَ، وَسَلَّطَ عَلَيْهِمْ رَسُولَهُ وَالمُؤْمِنِينَ، أَلاَ وَإِنَّهَا لَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي، وَلاَ تَحِلُّ لِأَحَدٍ بَعْدِي، أَلاَ وَإِنَّمَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، أَلاَ وَإِنَّهَا سَاعَتِي هَذِهِ حَرَامٌ، لاَ يُخْتَلَى شَوْكُهَا، وَلاَ يُعْضَدُ شَجَرُهَا، وَلاَ يَلْتَقِطُ سَاقِطَتَهَا إِلَّا مُنْشِدٌ، وَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ: إِمَّا يُودَى وَإِمَّا يُقَادُ ” فَقَامَ رَجُلٌ مِنْ أَهْلِ اليَمَنِ، يُقَالُ لَهُ أَبُو شَاهٍ، فَقَالَ: اكْتُبْ لِي يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : «اكْتُبُوا لِأَبِي شَاهٍ» ثُمَّ قَامَ رَجُلٌ مِنْ قُرَيْشٍ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِلَّا الإِذْخِرَ، فَإِنَّمَا نَجْعَلُهُ فِي بُيُوتِنَا وَقُبُورِنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِلَّا الإِذْخِرَ»

وَتَابَعَهُ عُبَيْدُ اللَّهِ، عَنْ شَيْبَانَ فِي الفِيلِ قَالَ بَعْضُهُمْ: عَنْ أَبِي نُعَيْمٍ: «القَتْلَ» وَقَالَ عُبَيْدُ اللَّهِ: «إِمَّا أَنْ يُقَادَ أَهْلُ القَتِيلِ»


Bukhari-Tamil-6880.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-6880.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-5734 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.