தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-707

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 65

(தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டி ருப்போரின்) குழந்தை அழுவதைக் கேட்டு (தலைமை தாங்கித் தொழுவித்துக் கொண்டி ருப்பவர்) தொழுகையைச் சுருக்கமாகத் தொழுது முடிப்பது. 

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்’. என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 10

(புகாரி: 707)

بَابُ مَنْ أَخَفَّ الصَّلاَةَ عِنْدَ بُكَاءِ الصَّبِيِّ

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِنِّي لَأَقُومُ فِي الصَّلاَةِ أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ»

تَابَعَهُ بِشْرُ بْنُ بَكْرٍ، وَابْنُ المُبَارَكِ، وَبَقِيَّةُ، عَنِ الأَوْزَاعِيِّ


Bukhari-Tamil-707.
Bukhari-TamilMisc-707.
Bukhari-Shamila-707.
Bukhari-Alamiah-666.
Bukhari-JawamiulKalim-669.




1 . இந்தக் கருத்தில் அபூகதாதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-, புகாரி-707 , இப்னு மாஜா-, அபூதாவூத்-, நஸாயீ-,

2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-708 .

3 . உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-990 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.