தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-722

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 74

வரிசையை நேராக்குவதும் தொழுகையை பூரணமாக்குவதேயாம். 

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘பின்பற்றப் படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப் பட்டுள்ளார். அவருக்கு முரண் படாதீர்கள்! அவர் ருகூவு செய்யும்போது நீங்களும் ருகூவு செய்யுங்கள்! அவர் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறும்போது நீங்கள் ‘ரப்பனா லகல் ஹம்து’ எனக் கூறுங்கள்! அவர் ஸஜ்தாச் செய்யும்போது நீங்களும் ஸஜ்தாச் செய்யுங்கள்! அவர் உட்கார்ந்து தொழும்போது நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்! தொழுகையில் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்! ஏனெனில், வரிசையை ஒழுங்கு படுத்துவது தொழுகையை அழகுறச் செய்வதாகும்’.என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 10

(புகாரி: 722)

بَابٌ: إِقَامَةُ الصَّفِّ مِنْ تَمَامِ الصَّلاَةِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ

إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَلاَ تَخْتَلِفُوا عَلَيْهِ، فَإِذَا رَكَعَ، فَارْكَعُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا لَكَ الحَمْدُ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِذَا صَلَّى جَالِسًا، فَصَلُّوا جُلُوسًا أَجْمَعُونَ، وَأَقِيمُوا الصَّفَّ فِي الصَّلاَةِ، فَإِنَّ إِقَامَةَ الصَّفِّ مِنْ حُسْنِ الصَّلاَةِ


Bukhari-Tamil-722.
Bukhari-TamilMisc-722.
Bukhari-Shamila-722.
Bukhari-Alamiah-680.
Bukhari-JawamiulKalim-683.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.