தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7239

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை (எப்போதும் தொழும் நேரத்தைவிட)த் தாமதப்படுத்தினார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள் வந்து, ‘தொழுகைக்கு வாருங்கள், இறைத்தூதர் அவர்களே! பெண்களும் குழந்தைகளும் உறங்கிவிட்டார்கள்’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையில் நீர் சொட்டிக் கொண்டிருக்க வெளியே வந்து, ‘என் சமுதாயத்தாருக்கு’ அல்லது ‘மக்களுக்கு’ சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (இஷா) தொழுகையை இந்த (இருள் கப்பிய) நேரத்தில்தான் தொழவேண்டும் என்று அவர்களுக்கு நான் உத்தரவிட்டிருப்பேன்’ என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

நபி(ஸல்) அவர்கள் இந்த (இஷா)த் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! பெண்களும் குழந்தைகளும் தூங்கிவிட்டார்கள்’ என்று சொல்ல, நபி(ஸல்) அவர்கள் தங்களின் விலாவிலிருந்து வழியும் தண்ணீரைத் துடைத்தபடி, ‘என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (இஷாத் தொழுகைக்கு) இதுதான் சரியான நேரம் (என்று சொல்லியிருப்பேன்)’ என்றார்கள்.17

அதாஉ(ரஹ்) அவர்கள் அறிவித்ததாக அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களின் அறிவிப்பு ஒன்றும் உள்ளது. அதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் இடம் பெறவில்லை.

இதே ஹதீஸ் சிற்சில வாசக மாற்றங்களுடன் வேறு சில அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

Book :94

(புகாரி: 7239)

حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو: حَدَّثَنَا عَطَاءٌ، قَالَ

أَعْتَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالعِشَاءِ، فَخَرَجَ عُمَرُ فَقَالَ: الصَّلاَةَ يَا رَسُولَ اللَّهِ، رَقَدَ النِّسَاءُ وَالصِّبْيَانُ، فَخَرَجَ وَرَأْسُهُ يَقْطُرُ يَقُولُ: «لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي – أَوْ عَلَى النَّاسِ وَقَالَ سُفْيَانُ أَيْضًا عَلَى أُمَّتِي – لَأَمَرْتُهُمْ بِالصَّلاَةِ هَذِهِ السَّاعَةَ»، قَالَ ابْنُ جُرَيْجٍ: عَنْ عَطَاءٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ: أَخَّرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الصَّلاَةَ فَجَاءَ عُمَرُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، رَقَدَ النِّسَاءُ وَالوِلْدَانُ، فَخَرَجَ وَهُوَ يَمْسَحُ المَاءَ عَنْ شِقِّهِ يَقُولُ: «إِنَّهُ لَلْوَقْتُ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي»، وَقَالَ عَمْرٌو، حَدَّثَنَا عَطَاءٌ لَيْسَ فِيهِ ابْنُ عَبَّاسٍ، أَمَّا عَمْرٌو فَقَالَ: رَأْسُهُ يَقْطُرُ، وَقَالَ ابْنُ جُرَيْجٍ، يَمْسَحُ المَاءَ عَنْ شِقِّهِ، وَقَالَ عَمْرٌو: «لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي»، وَقَالَ ابْنُ جُرَيْجٍ: «إِنَّهُ لَلْوَقْتُ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي»، وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.