தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7347

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான் எனும் (18:54ஆவது) இறை வசனம். அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர் களிடம் மிக அழகிய முறையிலன்றி நீங்கள் தர்க்கம் செய்ய வேண்டாம். (29:46)75

 அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா(ரலி) அவர்களிடமும் ஒரு (நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம், ‘நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில் தானே இருக்கின்றன! அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பிவிடுவான்’ என்று சொன்னேன். நான் இப்படிச் சொன்னபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபடி தம் தொடையில் தட்டிக்கொண்டே ‘மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன்.76

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:

(இங்கு ‘இரவில் வந்தார்கள்’ என்பதைக் குறிக்க ‘தர(க்)க’ எனும் வினைச்சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது.) இரவில் வரும் எதுவாயினும் அதற்கு ‘தாரிக்’ என்று சொல்லப்படும். நட்சத்திரத்திற்கும் ‘தாரிக்’ என்று சொல்வதுண்டு. ‘ஸாம்ப்’ என்பது ‘பிரகாசிக்கச் கூடியது’ என்று பொருள்படும். ‘உஸ்குப்’ (உன் நெருப்பைப் பிரகாசிக்கச் செய்) என்று தீ மூட்டுபவனிடம் சொல்லப்படும்.

Book : 96

(புகாரி: 7347)

بَابُ قَوْلِهِ تَعَالَى {وَكَانَ الإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا} [الكهف: 54]

وَقَوْلِهِ تَعَالَى: {وَلاَ تُجَادِلُوا أَهْلَ الكِتَابِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ} [العنكبوت: 46]

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَتَّابُ بْنُ بَشِيرٍ، عَنْ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، أَنَّ حُسَيْنَ بْنَ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، قَالَ

إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَرَقَهُ وَفَاطِمَةَ – عَلَيْهَا السَّلاَمُ – بِنْتَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُمْ: «أَلاَ تُصَلُّونَ؟»، فَقَالَ عَلِيٌّ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا أَنْفُسُنَا بِيَدِ اللَّهِ، فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا، فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَالَ لَهُ ذَلِكَ، وَلَمْ يَرْجِعْ إِلَيْهِ شَيْئًا، ثُمَّ سَمِعَهُ وَهُوَ مُدْبِرٌ، يَضْرِبُ فَخِذَهُ وَهُوَ يَقُولُ: {وَكَانَ الإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا} [الكهف: 54]، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” يُقَالُ: مَا أَتَاكَ لَيْلًا فَهُوَ طَارِقٌ “، وَيُقَالُ {الطَّارِقُ} [الطارق: 2]: «النَّجْمُ»، وَ {الثَّاقِبُ} [الطارق: 3]: «المُضِيءُ»، يُقَالُ: «أَثْقِبْ نَارَكَ لِلْمُوقِدِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.