தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-864

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 162 இரவிலும் பின்னரவின் இருட்டிலும் பெண்கள் பள்ளிக்குப் புறப்பட்டுச் செல்வது. 

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். ‘பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்’ என்று உமர்(ரலி) கூறியதும் நபி(ஸல்) புறப்பட்டு வந்தார்கள். ‘இப்பூமியில் வசிப்பவர்கள் உங்களைத் தவிர வேறெவரும் இத்தொழுகையை எதிர் பார்த்திருக்க வில்லை’ என்றார்கள். அந்த நாள்களில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப் படவில்லை. இஷாவை அடிவானத்தின் சென்மை மறைந்ததிலிருந்து இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுது வந்தனர்.
Book : 10

(புகாரி: 864)

بَابُ خُرُوجِ النِّسَاءِ إِلَى المَسَاجِدِ بِاللَّيْلِ وَالغَلَسِ

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

أَعْتَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالعَتَمَةِ، حَتَّى نَادَاهُ عُمَرُ: نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا يَنْتَظِرُهَا أَحَدٌ غَيْرُكُمْ مِنْ أَهْلِ الأَرْضِ» وَلاَ يُصَلَّى يَوْمَئِذٍ إِلَّا بِالْمَدِينَةِ، وَكَانُوا يُصَلُّونَ العَتَمَةَ فِيمَا بَيْنَ أَنْ يَغِيبَ الشَّفَقُ إِلَى ثُلُثِ اللَّيْلِ الأَوَّلِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.