தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1459

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஏமன் நாட்டு மக்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ மூசா (ரலி) மற்றும் முஆத் பின் ஜபல் (ரலி) ஆகிய இருவரையும் அந்நாட்டுக்கு அனுப்பிய போது தோல் நீக்கப்பட்ட கோதுமை, தோல் நீக்கப்படாத கோதுமை, காய்ந்த திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவற்றில் தவிர (வேறு தானியங்களில்) நீங்கள் ஸகாத் வசூலிக்காதீர்கள் என அவ்விருவரிடமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

(ஹாகிம்: 1459)

أَخْبَرْنَاهُ أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي نَصْرٍ الْمَرْوَزِيُّ، قَالَا: ثنا مُحَمَّدُ بْنُ غَالِبٍ، ثنا أَبُو حُذَيْفَةَ، ثنا سُفْيَانُ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، وَمُعَاذِ بْنِ جَبَلٍ،

حِينَ بَعَثَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ يُعَلِّمَانِ النَّاسَ أَمْرَ دِينِهِمْ «لَا تَأْخُذُوا الصَّدَقَةَ إِلَّا مِنْ هَذِهِ الْأَرْبَعَةِ، الشَّعِيرِ، وَالْحِنْطَةِ وَالزَّبِيبِ وَالتَّمْرِ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1459.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1392.




இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ள அபூ ஹுதைஃபா என்பவர் பலவீனமானவர் ஆவார்.

  • இவருடைய மனன சக்தியில் கோளாறு உள்ளது என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார்.
  • இவர் தவறிழைப்பார் என இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    ஆகிய இருவரும் கூறியுள்ளனர்.
  • இவர் பலவீனமானவர் என்று திர்மிதீ அவர்களும், பந்தார் என்பவரும் கூறியுள்ளனர்.

நான்கு வகை விளைபொருட்களைத் தவிர மற்றவைகளுக்கு ஜகாத் இல்லை என்ற ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாக உள்ளதால் விளைபொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற பொதுவான ஆதாரங்களின் அடிப்படையில் நெல்லுக்கும் ஜகாத் கொடுத்தாக வேண்டும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-21989 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.