தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Khuzaymah-1445

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

திடலில் மிம்பர் இல்லாதபோது தரையில் நின்று உரையாற்றுதல்.

நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று தரையில் நின்று உரையாற்றினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

இப்னு குஸைமா கூறுகிறார்:

இந்த ஹதீஸில் வரும் عَلَى رِجْلَيْهِ என்ற வார்த்தைக்கு இரண்டு விளக்கம் உள்ளது.

1 . நபி (ஸல்) அவர்கள் நின்று உரையாற்றினார்கள். அமர்ந்து உரையாற்றவில்லை.

2 . தரையில் நின்று உரையாற்றினார்கள். (மிம்பரில் நின்று உரையாற்றவில்லை). மர்வான் அவர்கள், பெருநாளன்று உரையாற்ற மிம்பரை வைத்தபோது அபூஸயீத் (ரலி) அவர்கள் (இதற்கு முன் இவ்வாறு மிம்பர் வைக்கப்படவில்லை என்று) தடுத்தார்கள் (என்பதால் இவ்வாறு பொருள் கொள்ளலாம்).

 

(ibn-khuzaymah-1445: 1445)

بَابُ الْخُطْبَةِ قَائِمًا عَلَى الْأَرْضِ إِذَا لَمْ يَكُنْ بِالْمُصَلَّى مِنْبَرٌ

نا سَلْمُ بْنُ جُنَادَةَ، ثنا وَكِيعٌ، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ الْفَرَّاءِ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَرْحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ يَوْمَ عِيدٍ عَلَى رَاحِلَتِهِ»

قَالَ أَبُو بَكْرٍ: ” هَذِهِ اللَّفْظَةُ تَحْتَمِلُ مَعْنَيَيْنِ، أَحَدُهُمَا أَنَّهُ خَطَبَ قَائِمًا لَا جَالِسًا، وَالثَّانِي أَنَّهُ خَطَبَ عَلَى الْأَرْضِ، كَإِنْكَارِ أَبِي سَعِيدٍ عَلَى مَرْوَانَ لَمَّا أَخْرَجَ الْمِنْبَرَ، فَقَالَ: لَمْ يَكُنْ يُخْرِجُ الْمِنْبَرَ


Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-1445.
Ibn-Khuzaymah-Shamila-1445.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-1367.




  • இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
    இறப்பு ஹிஜ்ரி 311
    வயது: 88
    நூலின் மேற்கண்ட அஃளமீ பிரதியிலும், ஃபஹ்ல், தாருத் தஃஸீல் என்ற பிரதியிலும் خَطَبَ يَوْمَ عِيدٍ عَلَى رَاحِلَتِهِ – வாகனத்தின் மீது என்று உள்ளது.
  • ஆனால் இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
    இறப்பு ஹிஜ்ரி 311
    வயது: 88
    அவர்கள் இந்த ஹதீஸுக்கு கூறியுள்ள பாடத்தலைப்பையும், ஹதீஸின் இறுதியில் கூறியிருக்கும் விளக்கத்தையும் பார்க்கும்போது على رجليه – காலின் மீது (அதாவது தரையில்) நின்று என்ற வார்த்தையின்படியே இதைக் கூறியுள்ளார் என்று தெரிந்துக் கொள்ளலாம்.

«إتحاف المهرة لابن حجر» (5/ 382):

«‌5627 – حَدِيثٌ (خز حب حم) : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، خَطَبَ يَوْمَ الْعِيدِ عَلَى رِجْلَيْهِ.

خز فِي الْعِيدَيْنِ: ثنا سَلْمُ بْنُ جُنَادَةَ ، ثنا وَكِيعٌ ، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ ، عَنْهُ ، بِهَذَا. لَيْسَ فِي السَّمَاعِ.

حب فِي الْعَاشِرِ مِنَ الْخَامِسِ: أنا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى ، ثنا أَبُو خَيْثَمَةَ ، ثنا وَكِيعٌ ، بِهِ.

قَالَ أَحْمَدُ: ثنا وَكِيعٌ ، بِهِ»

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் இந்தச் செய்தியை தனது இத்ஹாஃபுல் மஹராவில் குறிப்பிடும்போது عَلَى رِجْلَيْهِ என்றே பதிவு செய்துள்ளார்.

(நூல்: அல்இத்ஹாஃப்-5627)

இந்தத் தகவலை அஹ்மத்-முஹம்மத் கிள்ரீ அவர்களும், அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களும் கூறியுள்ளனர்.

மேலும் முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5854 இல் عَلَى رَاحِلَتِهِ – என்று வந்திருப்பது நூலாசிரியரின் தவறு என்பதை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் விரிவாக கூறியுள்ளார். இப்னு மாஜா-1288 இல் உள்ள செய்தியின்படியும், அஹ்மத்-11263 இல் உள்ள செய்தியின்படியும், عَلَى رِجْلَيْهِ என்ற வாசகமே சரியானது என்று அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா-2968)

1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5854 , அஹ்மத்-11263 , முஸ்னத் அபீ யஃலா-1182 , இப்னு குஸைமா-1445 , இப்னு ஹிப்பான்-2825 ,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-956இப்னு மாஜா-1289திர்மிதீ-15201521 ,

3 comments on Ibn-Khuzaymah-1445

  1. >>நபி அவர்கள் இறுதி ஹஜ் நாளில் துல்ஹஜ் பிறை 10ல் ஒட்டகத்தின் மீதர்ந்து உரை நிகழ்த்தியுள்ளார்கள்.ஹாஜிகளுக்கு பெருநாள் தொழுகை இல்லை ஆனால் இது பெருநாள் தினம் என்பதால் இதை பெருநாள் குத்பா என்று சில ஹதீஸ்களில் வருகிறது. இந்த உரை நிகழ்த்திய பின்னர் ஒட்டகத்திலிருந்து கீழிறங்கி குர்பானியும் கொடுத்துள்ளார்கள்.
    1)நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் ஹஜ் பெருநாள் தினத்தில் தமது அள்பா எனும் ஒட்டகத்தின் மீதமர்ந்து (குத்பா) உரை நிகழ்த்தியதை நான் பார்த்திருக்கிறேன்.
    அறிவிப்பவர்: ஹிர்மாஸ் பின் ஸியாத் (ரலி) ,நூல்கள்: அஹ்மத் 19218, அபூதாவூத் 1669
    2)நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜின்போது தமது ஒட்டகத்தின் மீது அமர்ந்தவாறு மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். பின்னர் (ஒட்டகத் திலிருந்து) கீழே இறங்கி இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் கொண்டு வரச் சொல்லி அவற்றை அறுத்(து குர்பானி கொடுத்தார்கள். திர்மிதீ 1440
    3)அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நஹ்ருடைய) அந்நாளில் தமது ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது “இது எந்த நாள் என்று உங்களுக்குத் தெரியுமா?”என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு (மௌனமாக இருந்துவிட்டு,) “இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளல்லவா?” என்று கேட்க, நாங்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்றோம்.
    மேலும் “இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்று சொன்னோம். அவர்கள் “இது துல்ஹிஜ்ஜா மாதம் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்றோம்………….. பிறகு கறுப்பு கலந்த இரு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் திரும்பி, அவற்றை அறுத்தார்கள்.
    முஸ்லிம் -3468,3469
    >>அடுத்து நீங்கள் புகாரி,முஸ்லிம் உள்ள அபூஸயீத் (ரலி) அவர்கள் தடுத்த அனைத்து ஹதீஸ்களையும் பார்த்தால் அவர்கள் தடுத்தது மிம்பர் வைப்பது அல்ல, அவர்கள் தடுத்தது தொழுகைக்கு முன்பு உரை நிழத்துவதை தான் என்பதை புரிந்துகொள்ளலாம்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      உங்கள் தகவல்:

      …அடுத்து நீங்கள் புகாரி,முஸ்லிம் உள்ள அபூஸயீத் (ரலி) அவர்கள் தடுத்த அனைத்து ஹதீஸ்களையும் பார்த்தால் அவர்கள் தடுத்தது மிம்பர் வைப்பது அல்ல, அவர்கள் தடுத்தது தொழுகைக்கு முன்பு உரை நிழத்துவதை தான் என்பதை புரிந்துகொள்ளலாம்…

      நமது பதில்:

      கைஸ் பின் முஸ்லிம் —> தாரிக் பின் ஷிஹாப் —> அபூஸயீத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரிலும், அஃமஷ் அவர்கள் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடரிலும் கூடுதலாக மிம்பரை கொண்டுவந்ததும் தவறு என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. புகாரீ அவர்கள் இதை பதிவு செய்யாவிட்டாலும் இந்த செய்தியில் விமர்சனம் இல்லை என்பதால் இதுவும் சரியான ஹதீஸ்தான். பார்க்க: அபூதாவூத்-1140 .

      புகாரீ-956 இன் தலைப்பே இந்த ஹதீஸின் கருத்தின் அடிப்படையில் தான் புகாரீ அவர்கள் கூறியுள்ளார் என்று இப்னு ஹஜர் ஃபத்ஹுல் பாரியில் குறிப்பிட்டுள்ளார்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.