தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1289

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளிலோ அல்லது ஹஜ் பெருநாளிலோ நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு சற்று உட்கார்ந்து விட்டு எழுந்து நின்றார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

(இப்னுமாஜா: 1289)

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَحْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ الْخَوْلَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ:

«خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فِطْرٍ أَوْ أَضْحَى، فَخَطَبَ قَائِمًا ثُمَّ قَعَدَ قَعْدَةً ثُمَّ قَامَ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1289.
Ibn-Majah-Shamila-1289.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1279.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22032-அபூபஹ்ர்-அப்துர்ரஹ்மான் பின் உஸ்மான் பின் உமைய்யா பலவீனமானவர் என பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/531)

  • மேலும் ராவீ-7942-இஸ்மாயீல் பின் அல்கவ்லானீ நிராகரிக்கப்பட்டவர் என விமர்சிக்கப்பட்டுள்ளார்.

(நூல்: இக்மாலு தஹ்தீபுல் கமால் 2/204)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க: இப்னு குஸைமா-1445 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.