தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2305

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒட்டகம் வைத்திருப்போருக்கு பெருமையிருக்கிறது. ஆட்டில் பரக்கத் இருக்கிறது. குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது.

அறிவிப்பவர்: உர்வா பின் அபுல்ஜஃத் (ரலி)

(இப்னுமாஜா: 2305)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَامِرٍ، عَنْ عُرْوَةَ الْبَارِقِيِّ، يَرْفَعُهُ، قَالَ:

«الْإِبِلُ عِزٌّ لِأَهْلِهَا، وَالْغَنَمُ بَرَكَةٌ، وَالْخَيْرُ مَعْقُودٌ فِي نَوَاصِي الْخَيْلِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-2305.
Ibn-Majah-Shamila-2305.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-2298.




  • இந்த செய்தியில் வரும் “ஒட்டகம் வைத்திருப்போருக்கு பெருமையிருக்கிறது” என்ற வாசகம் ஷாத் என்ற வகையில் பலவீனமாகும். காரணம் ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் இவ்வாறு கூறவில்லை. பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற விதி இங்கு பொருந்தாது.

(பார்க்க: الإبل عز لأهلها و الغنم بركة)

மேலும் பார்க்க: புகாரி-2850 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.