தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-296

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த கழிப்பிடங்கள் (ஷைத்தான்கள்) வருகை தரும் இடமாக உள்ளது. ஆகவே உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கிலி)ருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி)

(இப்னுமாஜா: 296)

بَابُ مَا يَقُولُ الرَّجُلُ إِذَا دَخَلَ الْخَلَاءَ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ، فَإِذَا دَخَلَ أَحَدُكُمْ، فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ “

حَدَّثَنَا جَمِيلُ بْنُ الْحَسَنِ الْعَتَكِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، ح وَحَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْقَاسِمِ بْنِ عَوْفٍ الشَّيْبَانِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَذَكَرَ الْحَدِيثَ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-292.
Ibn-Majah-Shamila-296.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-292.




  • இந்தக் கருத்தில் கதாதா வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர்கள் பல வகையாக வந்துள்ளது என்பதால் சிலர் இந்த அறிவிப்பாளர்தொடரை முழ்தரிப் என்று கூறுகின்றனர்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாமிடம் நான் இதைப் பற்றி நான் கேட்கும்போது, கதாதா வழியாக வரும் இருவகையான அறிவிப்பாளர்தொடர்களுமே சரியானதாக இருக்கலாம் என்று கூறினார் என திர்மிதீ இமாம் கூறியுள்ளார். (இந்தக் கருத்தையே ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    இமாமும் கூறியுள்ளார்)

(பார்க்க: திர்மிதீ-5)

அபூஸுர்ஆ அவர்களும், (திர்மிதீ இமாமும்) இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்தியே மிகச் சரியானது என்று கூறியுள்ளனர்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-13)

  • ஷுஃபாவும், இவரைப் போன்று மற்றவர்கள் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரான கதாதா —> நள்ரு பின் அனஸ் —> ஸைத் பின் அர்கம் (ரலி) என்பதே சரியானது என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-2520, 12/130)

2 . இந்தக் கருத்தில் ஸைத் பின் அர்கம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • கதாதா —> நள்ரு பின் அனஸ் —> ஸைத் பின் அர்கம் (ரலி)

பார்க்க: அஹ்மத்-19286 , 19332 , இப்னு மாஜா-296 , அபூதாவூத்-06 ,

  • கதாதா —> காஸிம் பின் அவ்ஃப் —> ஸைத் பின் அர்கம் (ரலி)

பார்க்க: அஹ்மத்-19331 , இப்னு மாஜா-296 ,

மேலும் பார்க்க: புகாரி-142 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.