தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3123

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னுமாஜா: 3123)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ كَانَ لَهُ سَعَةٌ، وَلَمْ يُضَحِّ، فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3123.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3122.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25292-அப்துல்லாஹ் பின் அய்யாஷ் பின் அப்பாஸ் அல்கித்பானீ பற்றி இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இப்னு கல்ஃபூன் பிறப்பு ஹிஜ்ரி 555
    இறப்பு ஹிஜ்ரி 636
    வயது: 81
    போன்றோர் நம்பகமானவர்களின் பட்டியலில் கூறியிருந்தாலும் இமாம் அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவர் பலவீனமானவர் என்று  கூறியுள்ளனர். (ஆனால் இதற்கு காரணத்தைக் கூறவில்லை)
  • முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் இவரின் ஒரு செய்தியை துணை சான்றாக கூறியுள்ளார். (பார்க்க:  முஸ்லிம்-3377 )
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் அந்தளவிற்கு பலமானவர் அல்ல; இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம்; இவர் சிறிது இப்னு லஹீஆவைப் போன்று என்று கூறியுள்ளார்.
  • இப்னு யூனுஸ் அவர்கள் இவரை முன்கருல் ஹதீஸ் (பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிப்பவர்) என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/126, தாரீகு இப்னு யூனுஸ்-1/279, தஹ்தீபுல் கமால்-15/410, தஹ்தீபுத் தஹ்தீப்-2/400)

மேலும் இந்த செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களின் கூற்றாகவும் வந்துள்ளது. அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களின் கூற்றாக அறிவிப்பவர்களே மிக பலமானவர்கள் என்பதால் இது நபித்தோழரின் கூற்று என இமாம் தஹாவீ,பிறப்பு ஹிஜ்ரி 238
இறப்பு ஹிஜ்ரி 321
வயது: 83
தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இப்னு அப்தில்பர் போன்ற பல ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை அப்துர்ரஹ்மான் அல்அஃரஜ் அவர்களிடமிருந்து மூவர் அறிவித்துள்ளனர்.

1 . அப்துல்லாஹ் பின் அய்யாஷ்.

இவரிடமிருந்து அறிவிப்பவர்களில் அப்துல்லாஹ் பின் வஹ்ப் மட்டும் நபித்தோழரின் கூற்றாக அறிவித்துள்ளார். அப்துல்லாஹ் பின் யஸீத், ஹைவா பின் ஷுரைஹ், ஸைத் பின் ஹுபாப், யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
யஹ்யா பின் யஃலா போன்றோர் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளனர். இவர்களில் சிலர் பலவீனமானவர்கள் என்றாலும் சிலர் பலமானவர்கள் என்பதால் அப்துல்லாஹ் பின் அய்யாஷ் வழியாக வரும் செய்திகளில் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக வந்துள்ள செய்திகளே மஹ்ஃபூல் ஆகும். அப்துல்லாஹ் பின் வஹ்ப் அவர்களின் அறிவிப்பு ஷாத்  ஆகும்.

2 . உபைதுல்லாஹ் பின் அபூஜஃபர்.

இவரிடமிருந்து அறிவிப்பவர்களில் யஹ்யா பின் அய்யூப், லைஸ் பின் ஸஃத், பக்ர்.. போன்றோர் நபித்தோழரின் கூற்றாக அறிவித்துள்ளனர். இப்னு உலாஸா என்பவர் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். இது மிக பலவீனமானது என்பதால் உபைதுல்லாஹ் பின் அபூஜஃபர் வழியாக வரும் செய்திகளில் நபித்தோழரின் கூற்றாக வந்துள்ள செய்திகளே மஃரூஃப் ஆகும்.

3 . ஜஃபர் பின் ரபீஆ.

இவர் அப்துர்ரஹ்மான் அல்அஃரஜ் அவர்களிடமிருந்து நபித்தோழரின் கூற்றாக அறிவித்துள்ளார்.

இந்த மூவர் வழியாக வரும் செய்திகளில் அப்துல்லாஹ் பின் அய்யாஷ் வழியாக வரும் செய்திகள் மட்டுமே நபி (ஸல்) அவர்களின் கூற்றாக வந்துள்ளது. இவர் விமர்சிக்கப்பட்டவர் என்பதாலும், மற்ற இருவர் பலமானவர்கள் என்பதால் அவர்கள் வழியாக நபித்தோழரின் கூற்றாக வந்திருக்கும் செய்திக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

  • இந்த செய்தியின் இருவழிகளை குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், உபைதுல்லாஹ் பின் அபூஜஃபர், நபித்தோழரின் கூற்றாக அறிவிப்பதே மிகச்சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-2023)

(சில பிரதிகளில் மவ்கூஃபே மிகச் சரியானது என்பதற்கு பதிலாக மர்ஃபூவே மிகச் சரியானது என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறியதாக உள்ளது. இது தவறாகும். காரணம் உபைதுல்லாஹ் பின் அபூஜஃபர் மவ்கூஃபாக அதாவது நபித்தோழரின் கூற்றாகத்தான் அறிவித்துள்ளார்)

  • அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த செய்தியை ஹஸன் என்றும், சரியானது என்றும் கூறியுள்ளார். ஆனால் ஹதீஸ்கலை விதிப்படி இவ்வாறு கூறமுடியாத வகையில் குறைகள் இருப்பதால் இது ஆதாரமாக ஏற்றுக்கொள்ளமுடியாத செய்தியாகும் என ஹைஸம் அல்ஹம்ரீ என்ற அறிஞர் கூறியுள்ளார். من كان له سعة .

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துர்ரஹ்மான் அல்அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-8273 , இப்னு மாஜா-3123 , தாரகுத்னீ-4762 , ஹாகிம்-3468 , 7565 , 7566 , குப்ரா பைஹகீ-19012 ,

  • அப்துல்லாஹ் பின் அய்யாஷ்…—> ஸயீத் பின் முஸைய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: தாரகுத்னீ-4743 , குப்ரா பைஹகீ-19013 ,

(இந்த செய்தி இடம்பெறும் மற்ற நூல்கள்: அஹ்காமுல் குர்ஆன்-அபூபக்ர் அல்ஜஸ்ஸாஸ், தம்ஹீத், தஹ்கீக்-இப்னுல் ஜவ்ஸீ,பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
தர்கீப், தாரீகு பக்தாத்…)

2 comments on Ibn-Majah-3123

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    பாங்கில் [தொழுகை அழைப்பின் போது] அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லும் போது கட்ட விரலில் முத்தமிட்டு கண்களில் தடவுவது பற்றிய ஹதீஸின் தெளிவு வேண்டும்

    1. வ அலைக்கும் ஸலாம். இந்த செய்தியை முஸ்னத் ஃபிர்தவ்ஸ் என்ற நூலில் தைலமீ பதிவு செய்துள்ளார். இது பலவீனமான செய்தி…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.