தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3380

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதுவுடன் சம்பந்தப்படும் பத்து வகையினர் சபிக்கப்படுகின்றனர்.

  1. மது பானத்தையும், 2. அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், 3. (தானே) தயார் செய்து கொள்பவரையும், 4. அதை விற்பவரையும், 5. அதை வாங்குபவரையும், 6. அதைச் சுமந்து செல்பவரையும், 7. யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும், 8. அதன் கிரயத்தை உண்பவரையும், 9. அதைப் பருகுபவரையும், 10. பிறருக்கு பருகக் கொடுப்பவரையும், (அல்லாஹ் சபிக்கிறான்.)…

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி).

(இப்னுமாஜா: 3380)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ الْغَافِقِيِّ، وَأَبِي طُعْمَةَ مَوْلَاهُمْ أَنَّهُمَا، سَمِعَا ابْنَ عُمَرَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

لُعِنَتِ الْخَمْرُ عَلَى عَشَرَةِ أَوْجُهٍ: بِعَيْنِهَا، وَعَاصِرِهَا، وَمُعْتَصِرِهَا، وَبَائِعِهَا، وَمُبْتَاعِهَا، وَحَامِلِهَا، وَالْمَحْمُولَةِ إِلَيْهِ، وَآكِلِ ثَمَنِهَا، وَشَارِبِهَا، وَسَاقِيهَا


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3371.
Ibn-Majah-Shamila-3380.
Ibn-Majah-Alamiah-3371.
Ibn-Majah-JawamiulKalim-3379.




மேலும் பார்க்க: அபூதாவூத்-3674 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.