தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-9103

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘மக்களில் யாருக்கு, ஒரு பெண் அதிகம் கடமைப்பட்டுள்ளார்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், “தனது கணவனுக்கு (அதிகம் கடமைப்பட்டுள்ளார்)” என்று பதிலளித்தார்கள்.

(பிறகு நான்) ‘மக்களில் யாருக்கு, ஒரு ஆண் அதிகம் கடமைப்பட்டுள்ளார்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், “தனது தாயாருக்கு (அதிகம் கடமைப்பட்டுள்ளார்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஉத்பா

(நஸாயி: 9103)

أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ أَبِي عُتْبَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ:

سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ النَّاسِ أَعْظَمُ حَقًّا عَلَى الْمَرْأَةِ؟ قَالَ: «زَوْجُهَا» قُلْتُ: فَأَيُّ النَّاسِ أَعْظَمُ حَقًّا عَلَى الرَّجُلِ؟ قَالَ: «أُمُّهُ»


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-9103.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-8807.




மேலும் பார்க்க: ஹாகிம்-7244 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.