தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1281

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 9

முஅத்தின் (இகாமத் சொல்லத்) தொடங்கிவிட்டால் கூடுதலான (நஃபில்) தொழுகைகள் எதையும் ஆரம்பிப்பது விரும்பத்தக்கதன்று.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (அந்த ஃபர்ள்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.

-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 6

(முஸ்லிம்: 1281)

9 – بَابُ كَرَاهَةِ الشُّرُوعِ فِي نَافِلَةٍ بَعْدَ شُرُوعِ الْمُؤَذِّنِ

وحَدَّثَنَي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَرْقَاءَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ».

وحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَابْنُ رَافِعٍ، قَالَا: حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنِي وَرْقَاءُ بِهَذَا الْإِسْنَادِ


Muslim-Tamil-1281.
Muslim-TamilMisc-1160.
Muslim-Shamila-710.
Muslim-Alamiah-1160.
Muslim-JawamiulKalim-1166.




1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக
வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-8379 , 8623 , 9873 , 10698 , 10874 , தாரிமீ-1488 , 1489 , 1491முஸ்லிம்-1281 , 1282 , இப்னு மாஜா-1151 , அபூதாவூத்-1266 , திர்மிதீ-421 , நஸாயீ-865 , 866 , குப்ரா பைஹகீ-4225 ,

  • இகாமத் சொல்லப்பட்டபின் ஸுபுஹுத் தொழுகையின் (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்களைத் தொழுதுக்கொள்ளலாம் என்ற கருத்தில் வரும் செய்தி பொய்யானதாகும். (பார்க்க: குப்ரா பைஹகீ-4226 )
கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.