தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1470

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 42

குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் (குறிப்பாக) அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான “அல்பகரா” மற்றும் “ஆலு இம்ரான்” ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். “அல்பகரா” அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் வீணர்கள் செயலிழந்து போவார்கள்.

இதை அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஆவியா பின் சல்லாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) “அல்பத்தலா” எனும் சொல்லுக்கு “சூனியக்காரர்கள்” என்று பொருள் என எனக்குத் தகவல் கிட்டியது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் (அவை மேகங்களைப் போன்று அல்லது பறவைக் கூட்டங்களைப் போன்று என்பதற்கு பதிலாக) “அவை மேகங்களைப் போன்றும் பறவைக் கூட்டங்களைப் போன்றும் வந்து வாதாடும்” என்று இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் முஆவியா பின் சல்லாம் (ரஹ்) அவர்கள் தமக்குக் கிட்டியதாகக் கூறிய சொற்பொருள் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 6

(முஸ்லிம்: 1470)

42 – بَابُ فَضْلِ قِرَاءَةِ الْقُرْآنِ، وَسُورَةِ الْبَقَرَةِ

حَدَّثَنِي الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا أَبُو تَوْبَةَ وَهُوَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ يَعْنِي ابْنَ سَلَّامٍ، عَنْ زَيْدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَلَّامٍ، يَقُولُ: حَدَّثَنِي أَبُو أُمَامَةَ الْبَاهِلِيُّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ

«اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ، اقْرَءُوا الزَّهْرَاوَيْنِ الْبَقَرَةَ، وَسُورَةَ آلِ عِمْرَانَ، فَإِنَّهُمَا تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ، أَوْ كَأَنَّهُمَا غَيَايَتَانِ، أَوْ كَأَنَّهُمَا فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ، تُحَاجَّانِ عَنْ أَصْحَابِهِمَا، اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ، فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ، وَتَرْكَهَا حَسْرَةٌ، وَلَا تَسْتَطِيعُهَا الْبَطَلَةُ».

قَالَ مُعَاوِيَةُ: بَلَغَنِي أَنَّ الْبَطَلَةَ: السَّحَرَةُ،.

– وحَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا يَحْيَى يَعْنِي ابْنَ حَسَّانَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ، غَيْرَ أَنَّهُ قَالَ: وَكَأَنَّهُمَا فِي كِلَيْهِمَا، وَلَمْ يَذْكُرْ قَوْلَ مُعَاوِيَةَ بَلَغَنِي


Muslim-Tamil-1470.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-804.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-1343.




(குறிப்பு: பதலா என்ற வார்த்தைக்கு பல பொருள் உள்ளது. ஆனால் இதற்கு சூனியக்காரர்கள் என்ற பொருளைக் கூறியது முஆவியா பின் ஸல்லாம் ஆவார். இவரை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், காலவரிசையில் 7வது படித்தரத்தில் கூறியுள்ளார் என்பதால் இவர் தாபிஈன்களுக்கு அடுத்த தலைமுறையான தபஉத் தாபிஈன் ஆவார்.

மேலும் இதில் இவர், இந்த தகவல் எனக்கு கிடைத்தது என்று தான் கூறியுள்ளார். யார் தனக்கு கூறினார் என்பதை குறிப்பிடவில்லை என்பதால் அந்த தகவலின் அறிவிப்பாளர்தொடர் சரியானதல்ல)


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-6626 ,

9 comments on Muslim-1470

  1. நீங்கள் சூனியம் என்பதை மேஜிக் என்று சொல்கிறீர்கள். ஆனால் இந்த ஹதீஸில் வரக்கூடிய சூனியம் எது விளக்கம் கூறுங்கள். மேஜிக்கை விரட்டுவதற்கு அவ்வளவு பெரிய சூரத்துல் பகராவை ஓத வேண்டுமா சொல்லுங்கள் பார்ப்போம்

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      பதலா என்ற வார்த்தைக்கு பல பொருள் உள்ளது. ஆனால் இதற்கு சூனியக்காரர்கள் என்ற பொருளைக் கூறியது முஆவியா பின் ஸல்லாம் ஆவார். இவர் தாபிஈன்களுக்கு அடுத்த தலைமுறையான தபஉத் தாபிஈன் ஆவார். மேலும் இதில் இவர், இந்த தகவல் எனக்கு கிடைத்தது என்று தான் கூறியுள்ளார். யார் தனக்கு கூறினார் என்பதை குறிப்பிடவில்லை என்பதால் அந்த தகவலின் அறிவிப்பாளர்தொடர் சரியானதல்ல.

    2. மேஜிக்கை யாரும் குறைசொல்லவில்லை. மேஜிக் செய்து தனக்கு இறையாற்றல் இருப்பதாக கூறுவது தான் பாவம்..
      மேஜிக்கை ஏன் விரட்டப் போகிறீர்கள். அதில் ஏதோ தந்திரம் உள்ளது என்று புரிந்துக்கொள்ளுங்கள்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.